• Sep 20 2024

இந்து ஆலயங்களின் அரைவட்டகல்லுக்கும் பௌத்தர்களின் சந்திரவட்டக்கல்லுக்கும் இடையில் வேறுபாடு..!பேராசிரியர் சி.பத்மநாதன் கருத்து..!samugammedia

Sharmi / Jun 19th 2023, 4:51 pm
image

Advertisement

இந்து ஆலயங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரைக்கல்வட்டத்திற்கும் பௌத்தர்களின் சந்திரவட்டக்கல்லுக்கும் வேறுபாடுகள் உள்ளதாக இலங்கையின் பிரபல தொல்லியல் ஆய்வாளரும் யாழ் பல்கலைக்கழக வேந்தருமான பேராசிரியர் சி.பத்மநாதன் தெரிவித்தார்.

இந்துசமய கலாசார அலுவலககள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சாசனவியல் பயிற்சி கருத்தரங்கு இன்று மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள இந்துக்கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்துசமய கலாசார அலுவலககள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய.அனிருத்தனன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கையின் பிரபல தொல்லியல் ஆய்வாளரும் யாழ் பல்கலைக்கழக வேந்தருமான பேராசிரியர் சி.பத்மநாதன்,கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர் திருமதி கௌரி லக்ஸ்மிகாந்தன்,யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை வருகைதரு விரிவுரையாளர் க.கிரிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வரலாற்று ஆய்வுசெயற்பாடுகள் குறைந்துள்ள நிலையில் அதனை ஊக்குவிக்கும் வகையில் இந்த பயிற்சி கருத்தரங்கு நடாத்தப்படுகின்றது.

இதன்போது கல்வெட்டுகளை வாசிப்பது குறித்து பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன் களப்பயணங்களும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து தெரிவித்த பேராசிரியர் பத்மநாதன்,

இந்துக்களின் ஆலயங்களின் வரலாறுகள் தேவாரங்களுடன்தான் ஆரம்பமாகின்றது என்கின்ற நிலை இருந்துவந்தது. இப்பொழுது அந்த நிலைமை முற்றாகமாறிவிட்டது. திருகோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம்போன்று முன்னேஸ்வரம்,நகுலேஸ்வரம்,திருக்கோவில்,கொக்கட்டிச்சோலை போன்ற ஆலயங்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை நாங்கள் தமிழ் சாசனங்களை பயின்றதன் காரணமாக நிறுவிக்கொள்ளமுடிந்தது.

அதுமட்டுமன்றி தற்போதெல்லாம் அரைவட்டக்கல் இருந்தால் அது சைவ ஆலயங்களுக்கு ஒரு பேரிடராக அமைந்துவிடுகின்றது.முன்பு பௌத்த ஆலயம் இருந்தது அதனை இடித்துவிட்டு ஆலயம் கட்டியுள்ளீர்கள் என்று கூறுகின்றார்கள்.

கொக்கட்டிச்சோலையில் அரைவட்டக்கல் இருக்கின்றது.அகஸ்தீஸ்வரத்தில் அரைவட்டக்கல் இருக்கின்றது.இந்த அரைவட்டக்கல்லுக்கும் இவர்கள் சொல்லும் சந்திரவட்டக்கல்லுக்கும் இடையே வேறுபாடு உண்டு.நான்கு விலங்குகளின் அணி வரிசை.யானை,குதிரை,சிங்கம்,காளை.இது அனுராதபுரத்தில் ஆறாம் நூற்றாண்டுக்கு பின்னர் ஏற்பட்ட வளர்ச்சி.

கல்வெட்டு சாசனங்களை பொறுத்த வரையில் எல்லா துறைகளுக்கும் அதிமுக்கியமானவை.உலகிலேயே பரத கண்டத்தில் மட்டும்தான் அதிகளவான கல்வெட்டுகளும் செப்பேடுகளும் காணப்படுகின்றன.ஐம்பதாயிரத்திற்கும் மேலானவை.அதில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டவைகள் தமிழ் மொழி கல்வெட்டுகள்.பத்தாயிரம் கல்வெட்டுகள் சோழர்மன்னர் காலத்திற்கு கல்வெட்டுகள் எனவும் தெரிவித்தார்.


இந்து ஆலயங்களின் அரைவட்டகல்லுக்கும் பௌத்தர்களின் சந்திரவட்டக்கல்லுக்கும் இடையில் வேறுபாடு.பேராசிரியர் சி.பத்மநாதன் கருத்து.samugammedia இந்து ஆலயங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரைக்கல்வட்டத்திற்கும் பௌத்தர்களின் சந்திரவட்டக்கல்லுக்கும் வேறுபாடுகள் உள்ளதாக இலங்கையின் பிரபல தொல்லியல் ஆய்வாளரும் யாழ் பல்கலைக்கழக வேந்தருமான பேராசிரியர் சி.பத்மநாதன் தெரிவித்தார்.இந்துசமய கலாசார அலுவலககள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சாசனவியல் பயிற்சி கருத்தரங்கு இன்று மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள இந்துக்கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.இந்துசமய கலாசார அலுவலககள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய.அனிருத்தனன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற்றது.இந்த நிகழ்வில் இலங்கையின் பிரபல தொல்லியல் ஆய்வாளரும் யாழ் பல்கலைக்கழக வேந்தருமான பேராசிரியர் சி.பத்மநாதன்,கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர் திருமதி கௌரி லக்ஸ்மிகாந்தன்,யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை வருகைதரு விரிவுரையாளர் க.கிரிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வரலாற்று ஆய்வுசெயற்பாடுகள் குறைந்துள்ள நிலையில் அதனை ஊக்குவிக்கும் வகையில் இந்த பயிற்சி கருத்தரங்கு நடாத்தப்படுகின்றது.இதன்போது கல்வெட்டுகளை வாசிப்பது குறித்து பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன் களப்பயணங்களும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதன்போது கருத்து தெரிவித்த பேராசிரியர் பத்மநாதன்,இந்துக்களின் ஆலயங்களின் வரலாறுகள் தேவாரங்களுடன்தான் ஆரம்பமாகின்றது என்கின்ற நிலை இருந்துவந்தது. இப்பொழுது அந்த நிலைமை முற்றாகமாறிவிட்டது. திருகோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம்போன்று முன்னேஸ்வரம்,நகுலேஸ்வரம்,திருக்கோவில்,கொக்கட்டிச்சோலை போன்ற ஆலயங்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை நாங்கள் தமிழ் சாசனங்களை பயின்றதன் காரணமாக நிறுவிக்கொள்ளமுடிந்தது.அதுமட்டுமன்றி தற்போதெல்லாம் அரைவட்டக்கல் இருந்தால் அது சைவ ஆலயங்களுக்கு ஒரு பேரிடராக அமைந்துவிடுகின்றது.முன்பு பௌத்த ஆலயம் இருந்தது அதனை இடித்துவிட்டு ஆலயம் கட்டியுள்ளீர்கள் என்று கூறுகின்றார்கள்.கொக்கட்டிச்சோலையில் அரைவட்டக்கல் இருக்கின்றது.அகஸ்தீஸ்வரத்தில் அரைவட்டக்கல் இருக்கின்றது.இந்த அரைவட்டக்கல்லுக்கும் இவர்கள் சொல்லும் சந்திரவட்டக்கல்லுக்கும் இடையே வேறுபாடு உண்டு.நான்கு விலங்குகளின் அணி வரிசை.யானை,குதிரை,சிங்கம்,காளை.இது அனுராதபுரத்தில் ஆறாம் நூற்றாண்டுக்கு பின்னர் ஏற்பட்ட வளர்ச்சி.கல்வெட்டு சாசனங்களை பொறுத்த வரையில் எல்லா துறைகளுக்கும் அதிமுக்கியமானவை.உலகிலேயே பரத கண்டத்தில் மட்டும்தான் அதிகளவான கல்வெட்டுகளும் செப்பேடுகளும் காணப்படுகின்றன.ஐம்பதாயிரத்திற்கும் மேலானவை.அதில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டவைகள் தமிழ் மொழி கல்வெட்டுகள்.பத்தாயிரம் கல்வெட்டுகள் சோழர்மன்னர் காலத்திற்கு கல்வெட்டுகள் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement