• Apr 27 2024

பண்டிகைக் காலத்தில் இலங்கையில் முட்டையும் இல்லை!

Egg
Chithra / Dec 18th 2022, 8:02 am
image

Advertisement

முட்டைக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டதையடுத்து சந்தையில் முட்டையின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது.

பண்டிகைக் காலத்தையொட்டி முட்டை விலை அதிகரித்துள்ளதால் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.


நுகர்வோர் அதிகார சபையினால் முட்டைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை வர்த்தமானிக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்ததையடுத்து சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது.

முன்னதாக அதிகபட்சமாக 50 ரூபாவுக்கு விற்கப்பட்ட முட்டை தற்போது 55 முதல் 65 ரூபா வரை விற்கப்படுகிறது.


அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ய வியாபாரிகள் மறைத்து வைப்பதாகவும் நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.

பண்டிகைக் காலத்தில் இலங்கையில் முட்டையும் இல்லை முட்டைக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டதையடுத்து சந்தையில் முட்டையின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது.பண்டிகைக் காலத்தையொட்டி முட்டை விலை அதிகரித்துள்ளதால் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.நுகர்வோர் அதிகார சபையினால் முட்டைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை வர்த்தமானிக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்ததையடுத்து சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது.முன்னதாக அதிகபட்சமாக 50 ரூபாவுக்கு விற்கப்பட்ட முட்டை தற்போது 55 முதல் 65 ரூபா வரை விற்கப்படுகிறது.அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ய வியாபாரிகள் மறைத்து வைப்பதாகவும் நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement