• May 04 2024

கச்சதீவில் புத்தர் சிலை உள்ளது- ஒத்துக்கொண்ட இலங்கை கடற்படை!samugammedia

Sharmi / Mar 27th 2023, 5:21 pm
image

Advertisement

புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர கச்சதீவில் வேறு எந்த மத வழிபாட்டுத் தலமும் இல்லை என்றும், கச்சத் தீவில் வேறு எந்த விகாரையோ அல்லது மத நினைவுச்சின்னத்தையோ கட்டும் எண்ணம் கடற்படைக்கு இல்லை என்றும் இலங்கை கடற்படையினர் இன்று தெரிவித்தனர்.

கச்சத் தீவில் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிப்பதற்கு கடற்படை இலக்கு வைத்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து கடற்படையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

கச்சத்தீவு நிலப்பரப்பில் இருந்து 50 கடல் மைல் தொலைவில் உள்ள மக்கள் வசிக்காத தீவு ஆகும் . கச்சத்தீவைச் சுற்றியுள்ள பாதுகாப்பைக் கையாள்வதற்காக இலங்கை கடற்படை ஒரு கடற்படைப் பிரிவை நிறுவியுள்ளது.

இலங்கை கடற்படையின் பௌத்த சங்கத்தின் அனுசரணையின் கீழ் கட்டப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தை பாதுகாப்பு கடமைகளுக்கு மேலதிகமாக கடற்படையினர் கவனித்து வருகின்றனர்.

கச்சத்தீவு தேவாலய திருவிழாவைத் தவிர, வருடத்தின் மற்ற நாட்களில், கடற்படையினர் தேவாலய வளாகத்தை சுத்தம் செய்து, தேவாலயத்துடன் தொடர்புடைய அனைத்து சடங்குகளையும் மிகுந்த பக்தியுடன் செய்வதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கச்சத்தீவு கடற்பரப்பில் உள்ள கடற்படை வீரர்கள் பெரும்பாலானவர்கள் பௌத்தர்கள் என்பதால், அவர்களின் அங்கு உள்ள சிறிய புத்தர் சிலையை வணங்குவதாக அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கச்சதீவில் புத்தர் சிலை உள்ளது- ஒத்துக்கொண்ட இலங்கை கடற்படைsamugammedia புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர கச்சதீவில் வேறு எந்த மத வழிபாட்டுத் தலமும் இல்லை என்றும், கச்சத் தீவில் வேறு எந்த விகாரையோ அல்லது மத நினைவுச்சின்னத்தையோ கட்டும் எண்ணம் கடற்படைக்கு இல்லை என்றும் இலங்கை கடற்படையினர் இன்று தெரிவித்தனர்.கச்சத் தீவில் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிப்பதற்கு கடற்படை இலக்கு வைத்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து கடற்படையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.கச்சத்தீவு நிலப்பரப்பில் இருந்து 50 கடல் மைல் தொலைவில் உள்ள மக்கள் வசிக்காத தீவு ஆகும் . கச்சத்தீவைச் சுற்றியுள்ள பாதுகாப்பைக் கையாள்வதற்காக இலங்கை கடற்படை ஒரு கடற்படைப் பிரிவை நிறுவியுள்ளது. இலங்கை கடற்படையின் பௌத்த சங்கத்தின் அனுசரணையின் கீழ் கட்டப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தை பாதுகாப்பு கடமைகளுக்கு மேலதிகமாக கடற்படையினர் கவனித்து வருகின்றனர்.கச்சத்தீவு தேவாலய திருவிழாவைத் தவிர, வருடத்தின் மற்ற நாட்களில், கடற்படையினர் தேவாலய வளாகத்தை சுத்தம் செய்து, தேவாலயத்துடன் தொடர்புடைய அனைத்து சடங்குகளையும் மிகுந்த பக்தியுடன் செய்வதாக கடற்படை தெரிவித்துள்ளது.கச்சத்தீவு கடற்பரப்பில் உள்ள கடற்படை வீரர்கள் பெரும்பாலானவர்கள் பௌத்தர்கள் என்பதால், அவர்களின் அங்கு உள்ள சிறிய புத்தர் சிலையை வணங்குவதாக அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement