• May 18 2024

ரஜீவ்காந்த்தின் குற்றச்சாட்டை மறுக்கும் ஈபிடிபி..பௌத்தமயமாக்கல் எரிச்சலடைய செய்கிறது.! சிறிரங்கேஸ்வரன் samugammedia

Sharmi / Mar 27th 2023, 5:15 pm
image

Advertisement

அனைத்து பல்லைக்கழகத்தின் ஏற்பாட்டில் யாழில் இடம்பெற்ற கருத்தரங்கை குழப்பு நோக்கில் மது போதையில் ஈபிடிபி ஆதரவாளர்கள் ஈடுபட்டிருந்தாக ரஜீவ்காந்த் குற்றம் சுமத்தியிருந்த
நிலையில் அந்த ஆர்ப்பாட்டத்திற்கும் தமது கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சிறிரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டத்தை மேற்கொண்டவர் 20 வருடங்களுக்கு மேலாக தமது கட்சி சார் நடவடிக்கைகளில் இல்லை என்றும் சிறிரங்கேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், யாழ் பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தினர் கருத்தரங்கில் கலந்துகொள்ளவில்லை என்றும் இதன் மூலம் பல்கலைக்கழக மாணவர்களின் கருத்தை ரஜீவ்காந்த் புரிந்துகொள்ளவில்லை என்பது  வெளிப்படையாகத் தெரிவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமது கட்சி மதசார்பற்ற கொள்கையை பின்பற்றும் நிலையில் ஒரு மதம் பிறிதொரு மதத்தை கட்டுப்படுத்துவதை விரும்பவில்லை. தமிழர் பெருமளவில் வாழும் பிரதேசங்களில் பௌத்தமயமாக்கலை மேற்கொள்வது மக்களை எரிச்சலடைய செய்கிறது. இது நாட்டிலிருக்கும் இன விரோதத்தை உக்கிரமடையச் செய்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

ரஜீவ்காந்த்தின் குற்றச்சாட்டை மறுக்கும் ஈபிடிபி.பௌத்தமயமாக்கல் எரிச்சலடைய செய்கிறது. சிறிரங்கேஸ்வரன் samugammedia அனைத்து பல்லைக்கழகத்தின் ஏற்பாட்டில் யாழில் இடம்பெற்ற கருத்தரங்கை குழப்பு நோக்கில் மது போதையில் ஈபிடிபி ஆதரவாளர்கள் ஈடுபட்டிருந்தாக ரஜீவ்காந்த் குற்றம் சுமத்தியிருந்த நிலையில் அந்த ஆர்ப்பாட்டத்திற்கும் தமது கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சிறிரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.குறித்த போராட்டத்தை மேற்கொண்டவர் 20 வருடங்களுக்கு மேலாக தமது கட்சி சார் நடவடிக்கைகளில் இல்லை என்றும் சிறிரங்கேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், யாழ் பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தினர் கருத்தரங்கில் கலந்துகொள்ளவில்லை என்றும் இதன் மூலம் பல்கலைக்கழக மாணவர்களின் கருத்தை ரஜீவ்காந்த் புரிந்துகொள்ளவில்லை என்பது  வெளிப்படையாகத் தெரிவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை தமது கட்சி மதசார்பற்ற கொள்கையை பின்பற்றும் நிலையில் ஒரு மதம் பிறிதொரு மதத்தை கட்டுப்படுத்துவதை விரும்பவில்லை. தமிழர் பெருமளவில் வாழும் பிரதேசங்களில் பௌத்தமயமாக்கலை மேற்கொள்வது மக்களை எரிச்சலடைய செய்கிறது. இது நாட்டிலிருக்கும் இன விரோதத்தை உக்கிரமடையச் செய்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement