• Nov 23 2024

நிதி அமைச்சில் பொருளாதாரத்தை தின்னும் பெருச்சாளி உள்ளது! டலஸ் குற்றச்சாட்டு

Chithra / Mar 15th 2024, 10:31 am
image

 

நிதி அமைச்சில் பொருளாதாரத்தை தின்னும் பெருச்சாளி ஒன்று உள்ளது. இந்த எலியைப் பார்த்தால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இற்குள் இருந்தது   என சுதந்திர ஜனதா சபையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

நாவல கொஸ்வத்த ‘சுதந்திரம்’ தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மதிய உணவு வழங்கப்படும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையை பதினொரு இலட்சத்திலிருந்து இருபது இலட்சமாக அதிகரிப்பதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இரண்டு அமைச்சரவை பத்திரங்களை முன்வைத்த போதிலும் நிதியமைச்சு பார்வையற்ற நோயாளியைப் போன்று செயற்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த திங்கட்கிழமை நிதியமைச்சகம் மசாலாப் பொருட்களின் மீள் ஏற்றுமதியை அனுமதிப்பதற்கான வர்த்தமானியை வெளியிட்டது. இதன் பின்னணியில் சதி உள்ளது. மிளகு, இலவங்கப்பட்டை, மஞ்சள், இஞ்சி, ஜாதிக்காய் போன்ற மசாலாப் பொருட்களில் இலங்கை முன்னணியில் உள்ளது.

எங்களது தேநீருக்கு செய்தது போலவே வெளிநாட்டில் இருந்து தரம் குறைந்த மசாலாக்கள் கொண்டு வந்து அதனை இலங்கைப் பொருட்களுடன் கலந்து Sri Lanka Brand ஆக மீள் ஏற்றுமதி செய்வதே நோக்கமாகும். என்றார். 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புத்தகத்தை நீங்கள் படித்தீர்களா என ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிடம் கேள்வி எழுப்பினர்.

 இது மிகவும் அர்த்தமுள்ள மொழியில் “Ghost Writer” என்பவரால் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதன் பெயரை “69 இலட்சத்தின் கெட்ட கனவு” என்று மாற்ற வேண்டும். தேவையென்றால் “Nightmare of a Nation” என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம். என்றார். 

நிதி அமைச்சில் பொருளாதாரத்தை தின்னும் பெருச்சாளி உள்ளது டலஸ் குற்றச்சாட்டு  நிதி அமைச்சில் பொருளாதாரத்தை தின்னும் பெருச்சாளி ஒன்று உள்ளது. இந்த எலியைப் பார்த்தால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இற்குள் இருந்தது   என சுதந்திர ஜனதா சபையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.நாவல கொஸ்வத்த ‘சுதந்திரம்’ தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.மதிய உணவு வழங்கப்படும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையை பதினொரு இலட்சத்திலிருந்து இருபது இலட்சமாக அதிகரிப்பதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இரண்டு அமைச்சரவை பத்திரங்களை முன்வைத்த போதிலும் நிதியமைச்சு பார்வையற்ற நோயாளியைப் போன்று செயற்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.கடந்த திங்கட்கிழமை நிதியமைச்சகம் மசாலாப் பொருட்களின் மீள் ஏற்றுமதியை அனுமதிப்பதற்கான வர்த்தமானியை வெளியிட்டது. இதன் பின்னணியில் சதி உள்ளது. மிளகு, இலவங்கப்பட்டை, மஞ்சள், இஞ்சி, ஜாதிக்காய் போன்ற மசாலாப் பொருட்களில் இலங்கை முன்னணியில் உள்ளது.எங்களது தேநீருக்கு செய்தது போலவே வெளிநாட்டில் இருந்து தரம் குறைந்த மசாலாக்கள் கொண்டு வந்து அதனை இலங்கைப் பொருட்களுடன் கலந்து Sri Lanka Brand ஆக மீள் ஏற்றுமதி செய்வதே நோக்கமாகும். என்றார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புத்தகத்தை நீங்கள் படித்தீர்களா என ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிடம் கேள்வி எழுப்பினர். இது மிகவும் அர்த்தமுள்ள மொழியில் “Ghost Writer” என்பவரால் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதன் பெயரை “69 இலட்சத்தின் கெட்ட கனவு” என்று மாற்ற வேண்டும். தேவையென்றால் “Nightmare of a Nation” என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம். என்றார். 

Advertisement

Advertisement

Advertisement