• Apr 28 2024

நாட்டில் மின்வெட்டின் நேரம் அதிகரிக்கும் அபாயம்!

Chithra / Dec 4th 2022, 9:22 am
image

Advertisement

நாட்டில் மின்வெட்டின் நேரத்தை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

புதிய எரிபொருள் விநியோகிக்கப்படாமையால் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் நேற்று நள்ளிரவு மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

4000 மெற்றிக்தொன் எரிபொருள் மூலம் 165 மெகாவோட் மின்சாரம் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இன்நிலையில் உரிய நேரத்தில் புதிய எரிபொருள் கிடைக்கவில்லை எனில் மின்வெட்டை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்றும் நிலைமையை பரிசீலித்து மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டுமா என ஆராயப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளை அதிகாரிகள் தவிர்த்து வருவதாக மின் பொறியாளர்கள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.


நாட்டில் மின்வெட்டின் நேரம் அதிகரிக்கும் அபாயம் நாட்டில் மின்வெட்டின் நேரத்தை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.புதிய எரிபொருள் விநியோகிக்கப்படாமையால் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் நேற்று நள்ளிரவு மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.4000 மெற்றிக்தொன் எரிபொருள் மூலம் 165 மெகாவோட் மின்சாரம் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்றது.இன்நிலையில் உரிய நேரத்தில் புதிய எரிபொருள் கிடைக்கவில்லை எனில் மின்வெட்டை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்றும் நிலைமையை பரிசீலித்து மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டுமா என ஆராயப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளை அதிகாரிகள் தவிர்த்து வருவதாக மின் பொறியாளர்கள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement