அரசாங்கத்தின் தற்போதைய செயல்பாடு குறித்துத் தாம் முழுமையாகத் திருப்தி அடையவில்லை என ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் இதனை வெளிப்படையாகத் தெரிவித்தார்.
எங்களால் மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றாலும், சாதனைகளைப் பெறுவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது.
அத்துடன், மக்கள் சீர்திருத்தங்களுக்காக அவசரப்படவில்லை என்றும் அவர்தெரிவித்தார்.
மேலும், அடுத்த ஆண்டு எங்கள் அரசாங்கம் எவ்வாறு செயற்படுகிறது என்று நாங்கள் காத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், ஆளும் கட்சிக்குள் நிலவும் அதிருப்தியின் ஒரு பகுதியையே அவரது இந்தக் கருத்து வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தின் சாதனைகளில் முழு திருப்தியில்லை ஆளும் கட்சி எம்.பி. கருத்து அரசாங்கத்தின் தற்போதைய செயல்பாடு குறித்துத் தாம் முழுமையாகத் திருப்தி அடையவில்லை என ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று அவர் இதனை வெளிப்படையாகத் தெரிவித்தார்.எங்களால் மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றாலும், சாதனைகளைப் பெறுவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது.அத்துடன், மக்கள் சீர்திருத்தங்களுக்காக அவசரப்படவில்லை என்றும் அவர்தெரிவித்தார்.மேலும், அடுத்த ஆண்டு எங்கள் அரசாங்கம் எவ்வாறு செயற்படுகிறது என்று நாங்கள் காத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.எவ்வாறாயினும், ஆளும் கட்சிக்குள் நிலவும் அதிருப்தியின் ஒரு பகுதியையே அவரது இந்தக் கருத்து வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.