• May 20 2024

ஆணோ, பெண்ணோ இல்லை, நாகரீகத்தை மட்டுமே ஆராதிப்பவர்.. மோடியை கிண்டலடித்த கீர்த்தி ஆசாத்!

Tamil nila / Dec 23rd 2022, 3:50 pm
image

Advertisement

பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடையை குறிப்பிட்டு, ஆணோ, பெண்ணோ இல்லை, நாகரீகத்தை மட்டுமே ஆராதிப்பவர் என்ற அவரை திரிணாமுல் காங்கிரஸின் கீர்த்தி ஆசாத் கிண்டல் செய்தார்.


பிரதமர் மோடி அண்மையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மேகாலயா சென்று இருந்தார். அம்மாநிலத்தில் ஷில்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரம்பரிய காசி உடையை பிரதமர் மோடி அணிந்து இருந்தார். அந்த ஆடையை மேற்கோள்காட்டி பிரதமர் மோடியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கீர்த்தி ஆசாத் கிண்டல் செய்துள்ளார்.



திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர் கீர்த்தி ஆசாத் டிவிட்டரில், பிரதமர் மோடி ஷில்லாங்கில் அணிந்து இருந்த பாரம்பரிய உடையுடன் இருக்கும் புகைப்படத்தையும், இன்டர்நெட்டில் இருந்து எடுக்கப்பட்ட அதேபோன்ற ஆடை அணிந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்து, ஆணோ, பெண்ணோ இல்லை, நாகரீகத்தை மட்டுமே ஆராதிப்பவர் என பதிவு செய்துள்ளார். இதற்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 



அசாம் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஹிமாந்தா பிஸ்வா சர்மா டிவிட்டரில், கீர்த்தி ஆசாத் மேகாலயாவின் கலாச்சாரத்தை எப்படி அவமதிக்கிறார் மற்றும் பழங்குடியினரின் உடைகளை கேலி செய்கிறார் என்பதை பார்க்க வருத்தமாக இருக்கிறது. கீர்த்தி ஆசாத்தின் கருத்தை ஆதரிக்கிறார்களா என்பதை திரிணாமுல் காங்கிரஸ் உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும். அவர்களின் மௌனம் மறைமுகமான ஆதரவாக இருக்கும். அதனால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என பதிவு செய்துள்ளார்.

ஆணோ, பெண்ணோ இல்லை, நாகரீகத்தை மட்டுமே ஆராதிப்பவர். மோடியை கிண்டலடித்த கீர்த்தி ஆசாத் பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடையை குறிப்பிட்டு, ஆணோ, பெண்ணோ இல்லை, நாகரீகத்தை மட்டுமே ஆராதிப்பவர் என்ற அவரை திரிணாமுல் காங்கிரஸின் கீர்த்தி ஆசாத் கிண்டல் செய்தார்.பிரதமர் மோடி அண்மையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மேகாலயா சென்று இருந்தார். அம்மாநிலத்தில் ஷில்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரம்பரிய காசி உடையை பிரதமர் மோடி அணிந்து இருந்தார். அந்த ஆடையை மேற்கோள்காட்டி பிரதமர் மோடியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கீர்த்தி ஆசாத் கிண்டல் செய்துள்ளார்.திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர் கீர்த்தி ஆசாத் டிவிட்டரில், பிரதமர் மோடி ஷில்லாங்கில் அணிந்து இருந்த பாரம்பரிய உடையுடன் இருக்கும் புகைப்படத்தையும், இன்டர்நெட்டில் இருந்து எடுக்கப்பட்ட அதேபோன்ற ஆடை அணிந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்து, ஆணோ, பெண்ணோ இல்லை, நாகரீகத்தை மட்டுமே ஆராதிப்பவர் என பதிவு செய்துள்ளார். இதற்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அசாம் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஹிமாந்தா பிஸ்வா சர்மா டிவிட்டரில், கீர்த்தி ஆசாத் மேகாலயாவின் கலாச்சாரத்தை எப்படி அவமதிக்கிறார் மற்றும் பழங்குடியினரின் உடைகளை கேலி செய்கிறார் என்பதை பார்க்க வருத்தமாக இருக்கிறது. கீர்த்தி ஆசாத்தின் கருத்தை ஆதரிக்கிறார்களா என்பதை திரிணாமுல் காங்கிரஸ் உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும். அவர்களின் மௌனம் மறைமுகமான ஆதரவாக இருக்கும். அதனால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என பதிவு செய்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement