• Nov 26 2024

யாழில் வன்முறைச் சம்பவங்களுக்கு இனியும் இடமில்லை...! மக்களே பயப்படாதீர்கள்...!மஞ்சுள செனரத் திட்டவட்டம்...!samugammedia

Sharmi / Dec 7th 2023, 10:22 am
image

யாழ் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிசார் பூரண ஒத்துழைப்பினை வழங்குவார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தார்

தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பொலிசாரால் கைது செய்யப்படுகின்றார்கள்

நேற்று முன்தினம் தெல்லிப்பளையில் இடம்பெற்ற சம்பவம் போல யாழ்ப்பாண மாவட்டத்தில் அவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெற அனுமதிக்க முடியாது.

எனினும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை 48 மணி நேரத்திற்குள் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் ஏனைய பொலிஸ் பிரிவினர் இணைந்து சந்தேக நபர்களையும் சம்பந்தப்பட்ட வாகனத்தினையும் கைது செய்துள்ளார்கள். 

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறை  சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படுவோர் பொலிசாரால்  தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள். 

சில குழுவினரிடையே இருந்துவரும் பகைமையின் காரணமாகவே தற்போதைய வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக தெல்லிப்பழை சம்பவம் கூட ஏற்கனவே இரு குழுக்களுக்கிடேயே உள்ள முரண்பாட்டிற்கு பழி தீர்க்கும் முகமாகவே அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏதாவது குற்ற செயல்கள் இடம்பெற்றால் அவ்வாறான சம்பவத்துடன் தொடர்புடையவர்களை  கைது  செய்யக்கூடியதாகவுள்ளது.  

அதே போல யாழ்ப்பாண மாவட்டத்தில் கூலிக்கு அமர்த்தி வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம். 

அவ்வாறு யாராவது ஈடுபட்டால் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை நாம் முன்னெடுத்துள்ளோம்.

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது பொலிசாரின் கடமை எனவே பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள்.

பொதுமக்கள் இந்த விடயங்கள் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு யாழ்ப்பாணத்தில் பொலிசார் தொடர்ச்சியாக  செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள் எனவும் தெரிவித்தார் .

யாழில் வன்முறைச் சம்பவங்களுக்கு இனியும் இடமில்லை. மக்களே பயப்படாதீர்கள்.மஞ்சுள செனரத் திட்டவட்டம்.samugammedia யாழ் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிசார் பூரண ஒத்துழைப்பினை வழங்குவார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தார்தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பொலிசாரால் கைது செய்யப்படுகின்றார்கள்நேற்று முன்தினம் தெல்லிப்பளையில் இடம்பெற்ற சம்பவம் போல யாழ்ப்பாண மாவட்டத்தில் அவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெற அனுமதிக்க முடியாது.எனினும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை 48 மணி நேரத்திற்குள் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் ஏனைய பொலிஸ் பிரிவினர் இணைந்து சந்தேக நபர்களையும் சம்பந்தப்பட்ட வாகனத்தினையும் கைது செய்துள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறை  சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படுவோர் பொலிசாரால்  தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள். சில குழுவினரிடையே இருந்துவரும் பகைமையின் காரணமாகவே தற்போதைய வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.குறிப்பாக தெல்லிப்பழை சம்பவம் கூட ஏற்கனவே இரு குழுக்களுக்கிடேயே உள்ள முரண்பாட்டிற்கு பழி தீர்க்கும் முகமாகவே அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏதாவது குற்ற செயல்கள் இடம்பெற்றால் அவ்வாறான சம்பவத்துடன் தொடர்புடையவர்களை  கைது  செய்யக்கூடியதாகவுள்ளது.  அதே போல யாழ்ப்பாண மாவட்டத்தில் கூலிக்கு அமர்த்தி வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம். அவ்வாறு யாராவது ஈடுபட்டால் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை நாம் முன்னெடுத்துள்ளோம்.பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது பொலிசாரின் கடமை எனவே பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள்.பொதுமக்கள் இந்த விடயங்கள் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு யாழ்ப்பாணத்தில் பொலிசார் தொடர்ச்சியாக  செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள் எனவும் தெரிவித்தார் .

Advertisement

Advertisement

Advertisement