• Sep 30 2024

நாட்டை விட்டு தப்பிச்செல்ல எவ்வித அவசியமும் கிடையாது! கமல் குணரட்ன

Chithra / Sep 29th 2024, 9:31 am
image

Advertisement

 

நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

தாமும் தமது மனைவியும் நாட்டை விட்டு தப்பியோடியதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் பிரசாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தாம் பிறந்த நாடு எனவும், இது தாம் வளர்ந்த வாழ்ந்த நாடு எனவும் வாழ்ந்து மரிப்பதும் இந்த நாட்டிலேயே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு தப்பிச் செல்ல எவ்வித அவசியமும் கிடையாது எனவும் தாம் எந்தவிதமான பிழைகளும் செய்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது இளமைக் காலம் முழுவதையும் நாட்டு மக்களுக்காகவும், எதிர்கால தலைமுறையினருக்காகவும் காடுகளில் தீவிரவாதிகளுடன் போரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட நாட்டை விட்டு யாருக்கும் அஞ்சி தப்பிச் செல்லப் போவதில்லை எனவும், தாம் எங்கும் தப்பிச்செல்லவில்லை எனவும் தம்மை எந்த நேரத்திலும் சந்திக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டை விட்டு தப்பிச்செல்ல எவ்வித அவசியமும் கிடையாது கமல் குணரட்ன  நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.தாமும் தமது மனைவியும் நாட்டை விட்டு தப்பியோடியதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் பிரசாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இது தாம் பிறந்த நாடு எனவும், இது தாம் வளர்ந்த வாழ்ந்த நாடு எனவும் வாழ்ந்து மரிப்பதும் இந்த நாட்டிலேயே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நாட்டை விட்டு தப்பிச் செல்ல எவ்வித அவசியமும் கிடையாது எனவும் தாம் எந்தவிதமான பிழைகளும் செய்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தனது இளமைக் காலம் முழுவதையும் நாட்டு மக்களுக்காகவும், எதிர்கால தலைமுறையினருக்காகவும் காடுகளில் தீவிரவாதிகளுடன் போரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இவ்வாறு தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட நாட்டை விட்டு யாருக்கும் அஞ்சி தப்பிச் செல்லப் போவதில்லை எனவும், தாம் எங்கும் தப்பிச்செல்லவில்லை எனவும் தம்மை எந்த நேரத்திலும் சந்திக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement