• Nov 23 2024

நாட்டில் அரிசி கையிருப்பு இல்லை..! அமைச்சர் மஹிந்த வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Chithra / Dec 12th 2023, 12:24 pm
image

 

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

வருமானம் போதாமை உட்பட இன்னும் பல்வேறு காரணங்களினால் இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடுவதில்லை.

எனவே அவர்களை விவசாயத்தின் பக்கம் ஈர்க்க அவசியமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதற்காக விவசாய நவீனமயப்படுத்தல் பணிகளை மேலும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

2024 ஆம் ஆண்டு 04 வகையான பயிர்களை முதன்மைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். நெல் தற்போது வெற்றிகரமான நிலையை அடைந்துள்ளது.

அதனுடன் சோளம், மிளகாய், உருளைக் கிழங்கு ஆகியவற்றை பயிரிடுவதற்கு மக்களைத் தூண்டுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அதற்காக நாம் ஏற்கனவே ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். கடந்த காலங்களில் முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அது தொடர்பில் நாம் விசேட வேலைத்திட்டமொன்றை தயாரித்துள்ளோம். அடுத்த வருடம் முதல் முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது.

அதேபோன்று கோழி இறைச்சி இறக்குமதி செய்ய அனுமதி கோரப்பட்டாலும் கூட நாம் அதற்கு அனுமதி வழங்கவில்லை

நாட்டில் அரிசி கையிருப்பு இல்லாததால் அரிசியை நாட்டிலிருந்து கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அரிசி கையிருப்பு இருந்தால் அரிசியின் விலையை நிர்ணயிக்கும் திறன் நெல் ஆலை உரிமையாளர்களுக்கு இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அரிசி கையிருப்பு இல்லை. அமைச்சர் மஹிந்த வெளியிட்ட அதிர்ச்சி தகவல்  இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வருமானம் போதாமை உட்பட இன்னும் பல்வேறு காரணங்களினால் இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடுவதில்லை.எனவே அவர்களை விவசாயத்தின் பக்கம் ஈர்க்க அவசியமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதற்காக விவசாய நவீனமயப்படுத்தல் பணிகளை மேலும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.2024 ஆம் ஆண்டு 04 வகையான பயிர்களை முதன்மைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். நெல் தற்போது வெற்றிகரமான நிலையை அடைந்துள்ளது.அதனுடன் சோளம், மிளகாய், உருளைக் கிழங்கு ஆகியவற்றை பயிரிடுவதற்கு மக்களைத் தூண்டுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.அதற்காக நாம் ஏற்கனவே ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். கடந்த காலங்களில் முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.அது தொடர்பில் நாம் விசேட வேலைத்திட்டமொன்றை தயாரித்துள்ளோம். அடுத்த வருடம் முதல் முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது.அதேபோன்று கோழி இறைச்சி இறக்குமதி செய்ய அனுமதி கோரப்பட்டாலும் கூட நாம் அதற்கு அனுமதி வழங்கவில்லைநாட்டில் அரிசி கையிருப்பு இல்லாததால் அரிசியை நாட்டிலிருந்து கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அரிசி கையிருப்பு இருந்தால் அரிசியின் விலையை நிர்ணயிக்கும் திறன் நெல் ஆலை உரிமையாளர்களுக்கு இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement