• Apr 26 2024

சுக்கு காபியில் இவ்வளவு விஷயம் இருக்கா!

Sharmi / Dec 17th 2022, 8:03 pm
image

Advertisement

சுக்கு காபி மருத்துவப் பயன்கள்:

அதிகமாக மது அருந்தியவர்களுக்கு சுக்குடன் தனியா வைத்து சிறிது நீர் சேர்த்து மைய்யாக அரைத்து உண்ணக்கொடுத்தால் போதை நீங்கி இயல்பு நிலை ஏற்படும்.

ஆரம்பநிலை வாதத்தை குணமாக்க சுக்குடன் வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவரவும்.

கடுமையான சளி பிரச்சனை உள்ளவர்கள் சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகி வந்தால் கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

கை, கால் மூட்டுகளில் வலிகள் ஏற்பட்டால் சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும் அந்த இடங்களில் பூசிவர வலி முற்றிலும் குணமாகும்.

ஒரு வெற்றிலையை சிறிது சுக்குடன் சேர்த்து மென்று தின்றால் வாயுத்தொல்லை நீங்கும்.

பித்தத்தால் அவதிப்படுபவர்கள் சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்துகுடித்தால் பித்தம் விலகும்.

வாய்துர்நாற்றம், பல்வலி மற்றும் ஈறுகளின் பலவீனத்தை போக்க சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர பலன் கிடைக்கும்.

சிறிது சுக்குப்பொடி இட்டு தயிர்சாதம் சாப்பிட்டால் வயிற்றுப்புண்கள் ஆறும்.

மூலநோயை குணப்படுத்த சுக்குடன் கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகுவது சிறந்த பலனை தரும்.

மிளகு, கருப்பட்டி, சுக்கு என்பவற்றை சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக்குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

விஷக்காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்துகஷாயம் செய்து தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர காச்சல் குணமாகும்.

சுக்குடன் மிளகு, சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து கஷாயம் ஆக்கி காலை, மாலை பருகிவர மாந்தம் குணமாகும்.

மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகளை அழிப்பதற்கு சின்ன வெங்காயத்துடன் சிறிது சுக்கு சேர்த்து அரைத்து சாப்பிட வேண்டும்.

சுக்குடன் அதிமதுரம் சேர்த்து தூள் செய்து, தேனில்கலந்து சாப்பிட்டுவர இருமல் குணமாகும்.

சுக்குடன் மிளகு மற்றும் சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி தலைக்குத்தேய்த்துக் குளித்து வந்தால் நீர்க்கோவை நீங்கும் ஈர் மற்றும் பேன் ஒழியும்.

அதிகமாக மழைக் காலங்களில் சளி மற்றும் இருமல் பிரச்சினையால் பலர் அவதிப்படுவது வழமையான ஒன்று தான். நெஞ்சில் கபம் சேரச் சேர இந்த பிரச்சனை தீவிரமாகிறது. மருந்து மாத்திரைகள் எடுத்தாலும் சரிவருவதில்லை இதைக் குணப்படுத்த சிறந்த இயற்கை மருத்துவம் இந்த சுக்கு மல்லி காபியே ஆகும்.

இது போன்ற இயற்கை மூலிகை பானங்களை வாரத்தில் ஒன்றிரண்டு முறையாவது அருந்துவது உடல் நலத்திற்கு நலம் பயக்கும். அடிக்கடி ஏற்படும் உடல் நலக்கேடுகளில் இருந்து எம்மை காப்பது எமது கடமை ஆகும்.

சுக்கு காபியில் இவ்வளவு விஷயம் இருக்கா சுக்கு காபி மருத்துவப் பயன்கள்:அதிகமாக மது அருந்தியவர்களுக்கு சுக்குடன் தனியா வைத்து சிறிது நீர் சேர்த்து மைய்யாக அரைத்து உண்ணக்கொடுத்தால் போதை நீங்கி இயல்பு நிலை ஏற்படும்.ஆரம்பநிலை வாதத்தை குணமாக்க சுக்குடன் வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவரவும்.கடுமையான சளி பிரச்சனை உள்ளவர்கள் சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகி வந்தால் கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.கை, கால் மூட்டுகளில் வலிகள் ஏற்பட்டால் சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும் அந்த இடங்களில் பூசிவர வலி முற்றிலும் குணமாகும்.ஒரு வெற்றிலையை சிறிது சுக்குடன் சேர்த்து மென்று தின்றால் வாயுத்தொல்லை நீங்கும்.பித்தத்தால் அவதிப்படுபவர்கள் சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்துகுடித்தால் பித்தம் விலகும்.வாய்துர்நாற்றம், பல்வலி மற்றும் ஈறுகளின் பலவீனத்தை போக்க சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர பலன் கிடைக்கும்.சிறிது சுக்குப்பொடி இட்டு தயிர்சாதம் சாப்பிட்டால் வயிற்றுப்புண்கள் ஆறும்.மூலநோயை குணப்படுத்த சுக்குடன் கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகுவது சிறந்த பலனை தரும்.மிளகு, கருப்பட்டி, சுக்கு என்பவற்றை சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக்குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.விஷக்காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்துகஷாயம் செய்து தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர காச்சல் குணமாகும்.சுக்குடன் மிளகு, சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து கஷாயம் ஆக்கி காலை, மாலை பருகிவர மாந்தம் குணமாகும்.மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகளை அழிப்பதற்கு சின்ன வெங்காயத்துடன் சிறிது சுக்கு சேர்த்து அரைத்து சாப்பிட வேண்டும்.சுக்குடன் அதிமதுரம் சேர்த்து தூள் செய்து, தேனில்கலந்து சாப்பிட்டுவர இருமல் குணமாகும்.சுக்குடன் மிளகு மற்றும் சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி தலைக்குத்தேய்த்துக் குளித்து வந்தால் நீர்க்கோவை நீங்கும் ஈர் மற்றும் பேன் ஒழியும்.அதிகமாக மழைக் காலங்களில் சளி மற்றும் இருமல் பிரச்சினையால் பலர் அவதிப்படுவது வழமையான ஒன்று தான். நெஞ்சில் கபம் சேரச் சேர இந்த பிரச்சனை தீவிரமாகிறது. மருந்து மாத்திரைகள் எடுத்தாலும் சரிவருவதில்லை இதைக் குணப்படுத்த சிறந்த இயற்கை மருத்துவம் இந்த சுக்கு மல்லி காபியே ஆகும். இது போன்ற இயற்கை மூலிகை பானங்களை வாரத்தில் ஒன்றிரண்டு முறையாவது அருந்துவது உடல் நலத்திற்கு நலம் பயக்கும். அடிக்கடி ஏற்படும் உடல் நலக்கேடுகளில் இருந்து எம்மை காப்பது எமது கடமை ஆகும்.

Advertisement

Advertisement

Advertisement