• May 20 2024

தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதான தாக்குதலுக்கு எதிராக பெரும்பாண்மையின மக்கள் மத்தியில் வலுக்கும் கண்டனம்...! samugammedia

Sharmi / Sep 18th 2023, 3:31 pm
image

Advertisement

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் மீது நேற்றையதினம் திருகோணமலையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு பெரும்பான்மையின மக்களிடையே பல்வேறு கண்டனங்கள் அதிகரித்து வருகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவுவேந்தல் வாரத்தினை முன்னிட்டு பொத்துவிலில் இருந்து கடந்த 15ம் திகதி ஆரம்பமான திலீபனின் நினைவுகளை தாங்கிய ஊர்தியானது நேற்றையதினம்(18)  திருகோணமலை வீதி வழியாக பயணித்த போது ஊர்தியை வழிமறித்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த குழுவினர் குறித்த ஊர்தி மீதும் அதில் பயணித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பொலிஸார் முன்னிலையில் இடம்பெற்ற இச் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக ஊர்தி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மீதான தாக்குதலுக்கு  பெரும்பான்மையினத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

"திருகோணமலையில் திலீபன் நினைவிடத்தை தாக்க அனுமதித்த போது கடமையை கடத்திய பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனவாதத்தை குலைத்து ஆட்சியை தக்க வைக்க நினைக்கும் கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும். சிறுபான்மையினருக்கு குறிப்பிட்ட பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை நாம் மறக்க முடியாது. இறந்த ஒருவரை நினைவு கூர்வது குற்றமில்லை.

ஒரு மனிதனின் மனித உரிமைகள் உடைக்கப்படும் போது, அவனுடைய நோக்கம், நடத்தை, அரசியலை பார்ப்பதற்கு முன் அந்த அநீதியை நம்மால் தடுக்க முடியவில்லை என்றால், நம் உரிமைகளை காக்கவோ, உயிரை மதிக்கவோ முடியாது" என பெரும்பாண்மையினத்தை சேர்ந்த பெண்ணொருவர் சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதேவேளை காலிமுகத்திடல் போராட்டகளத்தில் முக்கிய செயற்பாட்டாளராக திகழ்ந்த லஹிரு வீரசேகர குறிப்பிடுகையில்,

திலீபன் நினைவேந்தல் வாகனங்கள் அணிவகுத்து செல்லும் போது ஒரு குழுவினர் தடிகளால் தாக்கியுள்ளனர். பொலிஸார் எவ்வளவு அசமந்தமாக நடந்து கொண்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

வாகனங்களை மட்டுமின்றி அங்கு வந்தவர்கள் மீதும் தலைக்கவசத்தால் அடிக்கிறார்கள். எனினும் யாரும் முறைப்பாடு செய்யவில்லை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கிறார் என லஹிரு தெரிவித்துள்ளார்.

1983 இல் கறுப்பு ஜூலையின் போது, அரசாங்கம் மக்களை கொல்ல அனுமதித்து காத்திருந்தது. எனவே தமிழர் என்பதாலேயே தனி பிரச்சனை.

அது எதுவுமே இல்லாமல் மே 09 அன்று காலி முகத்திடல் மீது தாக்குதல் நடத்தியது சிங்கள பௌத்த குண்டர்கள்தான்.ஒவ்வொரு 9ம் திகதியும் காலி முகத்திடலுக்கு நாங்கள் சென்றது மக்கள் போராட்டத்தின் வீரர்களை நினைவுகூரவே. அதற்கு அனுமதி கிடைக்காததால் நாங்கள் எதிர்த்து போராடினோம்.

எனவே அந்த மக்களுக்கு திலீபன் ஒரு மாவீரன். உலகம் என்ன சொன்னாலும் தடியால் அடிபட்டு ஒரு மனிதன் இறந்தால் அதுதான் உண்மையாகும்.அந்த உண்மைக்காக நிற்க ஒத்துக் கொள்ளாதவர்கள் தங்களுக்கு தாங்களே குழி வெட்டிக் கொள்வார்கள் என லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். 

இவ்வாறாக பெரும்பான்மையினத்தை சேர்ந்த பலரும் குறித்த சம்பவத்திற்கு தமது கண்டனங்களை பதிவு செய்து வருவதுடன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த  பல்வேறு  தரப்பினரும் குறித்த காடைத்தனமான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து வருகின்றனர்.




தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதான தாக்குதலுக்கு எதிராக பெரும்பாண்மையின மக்கள் மத்தியில் வலுக்கும் கண்டனம். samugammedia தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் மீது நேற்றையதினம் திருகோணமலையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு பெரும்பான்மையின மக்களிடையே பல்வேறு கண்டனங்கள் அதிகரித்து வருகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவுவேந்தல் வாரத்தினை முன்னிட்டு பொத்துவிலில் இருந்து கடந்த 15ம் திகதி ஆரம்பமான திலீபனின் நினைவுகளை தாங்கிய ஊர்தியானது நேற்றையதினம்(18)  திருகோணமலை வீதி வழியாக பயணித்த போது ஊர்தியை வழிமறித்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த குழுவினர் குறித்த ஊர்தி மீதும் அதில் பயணித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.இந்நிலையில் பொலிஸார் முன்னிலையில் இடம்பெற்ற இச் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக ஊர்தி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மீதான தாக்குதலுக்கு  பெரும்பான்மையினத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்."திருகோணமலையில் திலீபன் நினைவிடத்தை தாக்க அனுமதித்த போது கடமையை கடத்திய பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனவாதத்தை குலைத்து ஆட்சியை தக்க வைக்க நினைக்கும் கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும். சிறுபான்மையினருக்கு குறிப்பிட்ட பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை நாம் மறக்க முடியாது. இறந்த ஒருவரை நினைவு கூர்வது குற்றமில்லை.ஒரு மனிதனின் மனித உரிமைகள் உடைக்கப்படும் போது, அவனுடைய நோக்கம், நடத்தை, அரசியலை பார்ப்பதற்கு முன் அந்த அநீதியை நம்மால் தடுக்க முடியவில்லை என்றால், நம் உரிமைகளை காக்கவோ, உயிரை மதிக்கவோ முடியாது" என பெரும்பாண்மையினத்தை சேர்ந்த பெண்ணொருவர் சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.அதேவேளை காலிமுகத்திடல் போராட்டகளத்தில் முக்கிய செயற்பாட்டாளராக திகழ்ந்த லஹிரு வீரசேகர குறிப்பிடுகையில்,திலீபன் நினைவேந்தல் வாகனங்கள் அணிவகுத்து செல்லும் போது ஒரு குழுவினர் தடிகளால் தாக்கியுள்ளனர். பொலிஸார் எவ்வளவு அசமந்தமாக நடந்து கொண்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.வாகனங்களை மட்டுமின்றி அங்கு வந்தவர்கள் மீதும் தலைக்கவசத்தால் அடிக்கிறார்கள். எனினும் யாரும் முறைப்பாடு செய்யவில்லை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கிறார் என லஹிரு தெரிவித்துள்ளார்.1983 இல் கறுப்பு ஜூலையின் போது, அரசாங்கம் மக்களை கொல்ல அனுமதித்து காத்திருந்தது. எனவே தமிழர் என்பதாலேயே தனி பிரச்சனை. அது எதுவுமே இல்லாமல் மே 09 அன்று காலி முகத்திடல் மீது தாக்குதல் நடத்தியது சிங்கள பௌத்த குண்டர்கள்தான்.ஒவ்வொரு 9ம் திகதியும் காலி முகத்திடலுக்கு நாங்கள் சென்றது மக்கள் போராட்டத்தின் வீரர்களை நினைவுகூரவே. அதற்கு அனுமதி கிடைக்காததால் நாங்கள் எதிர்த்து போராடினோம்.எனவே அந்த மக்களுக்கு திலீபன் ஒரு மாவீரன். உலகம் என்ன சொன்னாலும் தடியால் அடிபட்டு ஒரு மனிதன் இறந்தால் அதுதான் உண்மையாகும்.அந்த உண்மைக்காக நிற்க ஒத்துக் கொள்ளாதவர்கள் தங்களுக்கு தாங்களே குழி வெட்டிக் கொள்வார்கள் என லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.  இவ்வாறாக பெரும்பான்மையினத்தை சேர்ந்த பலரும் குறித்த சம்பவத்திற்கு தமது கண்டனங்களை பதிவு செய்து வருவதுடன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த  பல்வேறு  தரப்பினரும் குறித்த காடைத்தனமான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement