• Jan 08 2025

நாட்டில் போதியளவு உப்பு கையிருப்பில்..!

Sharmi / Jan 2nd 2025, 8:30 am
image

நாட்டில் போதியளவு உப்பு கையிருப்பில் இருப்பதனால் அதனை இறக்குமதி செய்யத்தேவையில்லை என என இலங்கை உப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் நிசாந்த சந்தபரண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் உப்பளங்களில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

விவசாயத்தில் போகங்களைப் போன்று உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவ்வாறு இன்றி தொடர்ச்சியாக உப்பு உற்பத்தி செய்யப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, உணவிற்காக பயன்படுத்தும் உப்புக்கு தட்டுப்பாடு இருக்காது எனவும் கைத்தொழில் தேவைகளுக்காக பயன்படுத்தக் கூடிய உப்பு வகைகளுக்கே தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை, புத்தளம் ஆகிய இடங்களைத் தவிர தனியார் உப்பு உற்பத்தியாளர்களும் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சரியான திட்டங்களை வகுத்தால் உப்பை ஏற்றுமதி செய்ய முடியும் என இலங்கை உப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் நிசாந்த தெரிவித்துள்ளார். 


நாட்டில் போதியளவு உப்பு கையிருப்பில். நாட்டில் போதியளவு உப்பு கையிருப்பில் இருப்பதனால் அதனை இறக்குமதி செய்யத்தேவையில்லை என என இலங்கை உப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் நிசாந்த சந்தபரண தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,அம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் உப்பளங்களில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.விவசாயத்தில் போகங்களைப் போன்று உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவ்வாறு இன்றி தொடர்ச்சியாக உப்பு உற்பத்தி செய்யப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.அதேவேளை, உணவிற்காக பயன்படுத்தும் உப்புக்கு தட்டுப்பாடு இருக்காது எனவும் கைத்தொழில் தேவைகளுக்காக பயன்படுத்தக் கூடிய உப்பு வகைகளுக்கே தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அம்பாந்தோட்டை, புத்தளம் ஆகிய இடங்களைத் தவிர தனியார் உப்பு உற்பத்தியாளர்களும் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.சரியான திட்டங்களை வகுத்தால் உப்பை ஏற்றுமதி செய்ய முடியும் என இலங்கை உப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் நிசாந்த தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement