அடுத்த ஆண்டிற்கான பாதீட்டுத் திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதீட்டுத் திட்டத்திற்குப் பதிலாக இடைக்கால ஒதுக்கீட்டுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி அல்லது புதிய அரசாங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட இடமளிக்கும் நோக்கில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டில் வரவு செலவுத் திட்டம் இல்லை - நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு அடுத்த ஆண்டிற்கான பாதீட்டுத் திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.பாதீட்டுத் திட்டத்திற்குப் பதிலாக இடைக்கால ஒதுக்கீட்டுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி அல்லது புதிய அரசாங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட இடமளிக்கும் நோக்கில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.