• May 18 2024

இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் இலங்கையில் பாதிக்கப்படும் நகரங்கள் இவைதான்! பேராசிரியரின் கணிப்பு SamugamMedia

Chithra / Mar 1st 2023, 9:56 am
image

Advertisement

ஹிமாச்சல் - உத்தரகாண்ட மாநிலங்களில் எதிர்வரும் வாரத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவாகும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பின் பல முக்கிய பிரதேசங்களை பாதிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்தார்.


பொதுவாக நிலநடுக்கங்கள் எப்போது ஏற்படும் என்று கணிக்க முடியாது, ஆனால் அவை ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் விளைவுகள் ஏற்படக்கூடிய பகுதிகளை அடையாளம் காண முடியும் என்று பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்னவின் கருத்துப்படி, நிலநடுக்கம் ஏற்பட்டால், அதன் பாதிப்புகள் திருகோணமலை, மனம்பிட்டிய, மினிபே, பிபில, மொனராகலை, புத்தல, வெல்லவாய, அம்பலாந்தோட்டை, உஸ்ஸங்கொடை வரை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த இந்திய தட்டுக்கு அருகில் இலங்கை அமைந்திருப்பதால், அந்த தட்டில் ஏற்படும் மாற்றங்கள் இலங்கையை பாதிக்கலாம் என அவர் குறிப்பிடுகிறார்.

இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் இலங்கையில் பாதிக்கப்படும் நகரங்கள் இவைதான் பேராசிரியரின் கணிப்பு SamugamMedia ஹிமாச்சல் - உத்தரகாண்ட மாநிலங்களில் எதிர்வரும் வாரத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவாகும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பின் பல முக்கிய பிரதேசங்களை பாதிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்தார்.பொதுவாக நிலநடுக்கங்கள் எப்போது ஏற்படும் என்று கணிக்க முடியாது, ஆனால் அவை ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் விளைவுகள் ஏற்படக்கூடிய பகுதிகளை அடையாளம் காண முடியும் என்று பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்னவின் கருத்துப்படி, நிலநடுக்கம் ஏற்பட்டால், அதன் பாதிப்புகள் திருகோணமலை, மனம்பிட்டிய, மினிபே, பிபில, மொனராகலை, புத்தல, வெல்லவாய, அம்பலாந்தோட்டை, உஸ்ஸங்கொடை வரை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த இந்திய தட்டுக்கு அருகில் இலங்கை அமைந்திருப்பதால், அந்த தட்டில் ஏற்படும் மாற்றங்கள் இலங்கையை பாதிக்கலாம் என அவர் குறிப்பிடுகிறார்.

Advertisement

Advertisement

Advertisement