• May 06 2024

தவறு செய்ய தூண்டும் நோக்கில் மாணவிக்கு தொடர்ந்து வட்ஸ்அப் செய்திகளை அனுப்பிய நடன ஆசிரியர்! SamugamMedia

Chithra / Mar 1st 2023, 9:51 am
image

Advertisement

11ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவிக்கு நடன ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து வட்ஸ்அப் செய்திகளை அனுப்பிய சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

வெயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நடன ஆசிரியர் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வலயக் கல்வி அலுவலகத்திற்கு அறிவித்துள்ளது.

மாணவியை தவறு செய்ய தூண்டும் நோக்கில் ஆசிரியர் தொடர்ச்சியாக வட்ஸ்அப் செய்திகளை அனுப்பியதாக சந்தேகிக்கப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆசிரியை அனுப்பிய செய்திகளின் 'ஸ்கிரீன் ஷொட்'களை மாணவி தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் அறிந்த நபர் ஒருவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம், அத்தனகல்ல பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமைகள் ஊக்குவிப்பு பிரிவினர் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


தவறு செய்ய தூண்டும் நோக்கில் மாணவிக்கு தொடர்ந்து வட்ஸ்அப் செய்திகளை அனுப்பிய நடன ஆசிரியர் SamugamMedia 11ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவிக்கு நடன ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து வட்ஸ்அப் செய்திகளை அனுப்பிய சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.வெயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நடன ஆசிரியர் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வலயக் கல்வி அலுவலகத்திற்கு அறிவித்துள்ளது.மாணவியை தவறு செய்ய தூண்டும் நோக்கில் ஆசிரியர் தொடர்ச்சியாக வட்ஸ்அப் செய்திகளை அனுப்பியதாக சந்தேகிக்கப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஆசிரியை அனுப்பிய செய்திகளின் 'ஸ்கிரீன் ஷொட்'களை மாணவி தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சம்பவம் தொடர்பில் அறிந்த நபர் ஒருவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம், அத்தனகல்ல பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமைகள் ஊக்குவிப்பு பிரிவினர் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement