• Sep 20 2024

தமிழர்கள் என்ற அடையாளத்தை கைவிடுவதற்கு ஒருபோதும் தயாரில்லை! - அமைச்சர் டக்ளஸ்

Chithra / Feb 11th 2023, 11:53 am
image

Advertisement

இலங்கையை பொறுத்தவகையில் தமிழ் மக்கள் தமிழர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தை கைவிடவோ அல்லது இலங்கையர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தையோ கைவிடுவதற்கு ஒருபோதும் தயாரில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தள்ளார்.

யாழ்ப்பாண கலாசார மையத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களின் இந்த இனப்பிரச்சனையை விரைவில் தீர்ப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் எனவே அவரது திட்டங்களுக்கு தமிழ் மக்கள் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் என்றும்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரபலத்தை தேடித்தருகின்ற அரசியலில் ஈடுபடாமல் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை செயல் வடிவத்தில் அதனை முன்னெடுத்து காட்டியுள்ளதாக அமைச்சர் பாராட்டு தெரிவித்திருந்தார்.

13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அழுல்ப்படுத்துவதாக தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க அதனை நிறைவேற்றி காட்டுவார் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் என்ற அடையாளத்தை கைவிடுவதற்கு ஒருபோதும் தயாரில்லை - அமைச்சர் டக்ளஸ் இலங்கையை பொறுத்தவகையில் தமிழ் மக்கள் தமிழர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தை கைவிடவோ அல்லது இலங்கையர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தையோ கைவிடுவதற்கு ஒருபோதும் தயாரில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தள்ளார்.யாழ்ப்பாண கலாசார மையத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.தமிழ் மக்களின் இந்த இனப்பிரச்சனையை விரைவில் தீர்ப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் எனவே அவரது திட்டங்களுக்கு தமிழ் மக்கள் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் என்றும்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.பிரபலத்தை தேடித்தருகின்ற அரசியலில் ஈடுபடாமல் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை செயல் வடிவத்தில் அதனை முன்னெடுத்து காட்டியுள்ளதாக அமைச்சர் பாராட்டு தெரிவித்திருந்தார்.13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அழுல்ப்படுத்துவதாக தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க அதனை நிறைவேற்றி காட்டுவார் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement