• May 20 2024

பௌத்த மக்களையும் தமிழ் மக்களையும் முறுகல் நிலைக்குள் கொண்டுசென்று தாங்கள் ஆட்சிக்கு வரமுயற்சி..! இரா. சாணக்கியன்...!samugammedia

Sharmi / Sep 2nd 2023, 4:52 pm
image

Advertisement

பௌத்த மக்களையும் தமிழ் மக்களையும் ஒரு முறுகல் நிலைக்குள் கொண்டுசென்று தாங்கள் ஆட்சிக்கு வரலாமா என்கின்ற ஆய்வு செய்வதற்கான முதல்கட்டபடியாக வடக்கு கிழக்கிலே இந்த சில சம்பவங்களை பார்க்க கூடியதாக இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இக்கருத்துகளை அவர் முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த இரு வாரங்களாக மாவட்டத்திலே இடம்பெறும் விடயங்களை அவதானிக்கின்ற போது குறிப்பாக மாவட்டம் மட்டுமல்ல வடக்கு கிழக்கு நாடளாவிய ரீதியிலே நடைபெறும் விடயங்களை பார்க்கின்ற போது நான் ஒரு இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழர்களுக்கு ஒரு மிகவும் இறுக்கமான ஆபத்தான காலம் உருவாகலாம் என குறிப்பிட்டு இருந்தேன், அது தற்பொழுது நான் அன்று குறிப்பிட்ட விடயங்கள் நடைமுறையிலே காணக்கூடியதாக இருக்கின்றது. ஆரம்பகட்ட வேலைகள் ஆரம்பித்திருப்பதாக காணக் கூடியதாக இருக்கின்றது.

இவை அனைத்திற்கும் பிரதானமான காரணம் வடக்கு கிழக்கில் அன்மை காலமாக மதரீதியாக பிக்குமாருக்கும் இந்துக்குருமாருக்கு இடையில் இடம்பெறும் விடயங்கள், அண்மையில் கூட திருகோணமலையில் ஜனாதிபதியும் இந்தியாவும் செய்த சில ஒப்பந்தங்களைப் பற்றி சில ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இவ்வாறாக இந்த விடயங்களை அவதானிக்கும் போது முல்லைத்தீவு மாவட்டத்திலே குறுந்தூர் மலையிலே மாபெரும் எதிர்ப்பு பேரணியிலேயே தமிழ் மக்கள் ஈடுபட வேண்டியதாக வந்தது, பிக்குமார் அந்த இடத்திற்கு வந்தது அதனைத் தொடர்ந்து திருகோணமலையில் ஆளுனருடைய அலுவலகத்துக்குள் அடாவடித்தனமாக பிக்குமார்கள் சென்றபோது அந்த விகாரை கட்டுவதை ஒரு பெரிய பூகம்பமாக தெற்கிலே பரபரப்பாக செய்திகளை வெளியிடுவதும்.

இதிலும் குறிப்பாக டி.என்.எல் என அழைக்கப்படும் ஊடகம் அதுவும் ஜனாதிபதியின் ரணில் விக்ரமசிங்கவினுடைய சகோதரனுடைய ஊடகம். புதிதாக முகப்புத்தக பக்கம் ஒன்றினை திறந்து அதிலே குறிப்பிட்ட அளவில் பிக்குமார்களுக்கும் வடக்குக் கிழக்கிலே நடக்கும் பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் வழங்குவதையும் அதேபோன்றுதான் மகாவலி காணிகளுக்குள்ளே சென்ற மட்டக்களப்பு மாவட்ட மததத்தலைவர்களை பலாத்காரமாக 5, 6 மணித்தியாலங்கள் அந்த இடத்திலேயே பலத்காரமாக தடுத்து வைத்திருந்தது, யாழ்ப்பாணத்திலேயே தையிட்டியிலே இடம்பெறும் பிரச்சனை, வவுனியாவில் வெடுக்குநாறியில் பிரச்சனை இவ்வாறாக நாங்கள் தொடர்ச்சியாகவே இந்த பிரச்சினைகளை கூறிக்கொண்டு போகலாம். இவை அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நான் சொன்னது போல இவை அனைத்தும் ஒரு பாரிய திட்டத்தின் உடைய ஆரம்பமாக இருக்கலாம் என சந்திக்கக்கூடியதாக இருக்கின்றது.

நாட்டிலே மக்கள் மத்தியிலே எரிபொருள் தட்டுப்பாடு இல்லாமல் போனது, மின்வெட்டு நிறுத்தப்பட்டது போன்ற விடயங்களுக்கு கடந்த ஒரு வருடமாக எதுவாக இருந்தாலும் ரணில் விக்கிரமசிங்கமினுடைய ஆட்சியிலே மின்சாரம் துண்டிக்கப்படவில்லை, எரிபொருள் தட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது, எரிவாயு இருக்கின்றது என்று எல்லாம் மக்கள் ஒரு அளவு தங்களுடைய வாழ்க்கையிலே பிரச்சினை குறைந்தது என்று ஒரு மனநிலை இருந்தாலும் கூட எதிர்வரும் வருடத்தில் குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்திலே முன்வைத்த விடயங்களை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட போகின்றார்கள் என்பது உறுதியாக தெரிகின்றது.

உள்நாட்டு கடன் மறு சீரமைப்பு சரியாக அவர்களால் செய்து முடிக்க முடியாத ஒரு காரணம் இருக்கும். ஈ .பி.எப், ஈ.டி.எப் ஓய்வு பெற்ற எமது உறவுகளுடைய அந்த நிதியிலே கை வைப்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைத்த சில நிபந்தனைகளை இலங்கை அரசாங்கத்தினால் அடைய முடியாத ஒரு சூழல் காணக் கூடியதாக இருக்கும்.

அவ்வாறு நடந்தால் எதிர்வரும் வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் முகம் கொடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு தான் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியதாக காட்டி மக்களுடைய வாக்களை பெற முடியாத சூழல் அமையலாம்.

அதற்காகத்தான் இந்த 13வது திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டுக்குள்ளே குழப்ப நிலையினை உருவாக்குவதற்கு இந்த சர்வ கட்சி மாநாட்டுகளை நடத்தி, அவர் எதிர்பார்த்த வண்ணம் அந்த 13 வது திருத்தச் சட்ட விடயம் மாபெரும் பூகம்பமாக மாறவில்லை. இந்த விடயங்களை வைத்துப் பார்க்கின்ற போது நிச்சயமாக எதிர்வரும் காலங்களிலேயே ஒரு பௌத்த, இந்து சமய வழிபாடு செய்யும் மக்களுக்கு இடையிலான சில முரண்பாடுகளை வளர்த்து. இந்த நாடு தமிழ் சிங்களம் என்று சொல்லி கடந்த காலத்திலேயே இனரீதியாக ஒரு முறுகல் நிலை இருந்ததை தற்பொழுதும் இருக்கின்றது சமத்துவம் இல்லாத பிரச்சனை ஆனால் அதனை வைத்து மீண்டும் ஒரு தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கு அவர் சில நேரம் கஷ்டமாக இருக்கலாம்.

அதேபோன்றுதான் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக இடம் பெற்ற வன்முறைகள் தர்கா நகர், அளுத்கம, திகன போன்ற இடங்களில் இஸ்லாமிய மக்களை கூறி வைத்து தாக்கி சில விடயங்களை வைத்து ஈஸ்டர் குண்டு வெடிப்பு போன்ற விடயங்களை வைத்தே கடந்த தேர்தலில் வெற்றிபெற்றார்கள். இம்முறையும் மக்கள் இந்த பொய்யை மீண்டும் நம்புவார்களா என்ற சந்தேகம் இருக்கின்ற காரணத்தினால் முதல்முறையாக சைவ சமய வழிபாடு செய்யும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் பௌத்த மதத்தை பின்பற்றும் சிங்கள மக்களையும் ஒரு முறுகல் நிலைக்கும் தள்ளிவிட்டால் இதை வைத்துக்கொண்டு தாங்கள் ஆட்சிக்கு வரலாமா என்கின்ற ஆய்வு செய்வதற்கான முதல்கட்டபடியாக தான் கடந்த மாதத்துக்குள்ளே நாங்கள் வடக்கு கிழக்கிலே இந்த சில சம்பவங்களை பார்க்க கூடியதாக இருக்கும்.

மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் இதிலேயே மிகவும் குறிப்பாக அண்மையில் கூட கஜேந்திரகுமார் அவர்களுடைய வீட்டிற்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்ட பொழுது உங்களுக்கு தெரியும் கொழும்பிலே எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும் அரசுக்கு எதிராக போராட்டம் என்று கூறினால் தண்ணீர் தாரைகள் போலீசார் பயன்படுத்துவது இவ்வாறாக போலீசார் நினைத்தால் ஜனாதிபதி விரும்பினால் போராட்டங்களை தடை செய்து முற்றாக நிறுத்தக்கூடிய அளவு இருக்கிறார்கள். ஆனால் கஜேந்திரகுமார் இன் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் உதயகம்மன்பில சார்பாக முன்னெடுத்த போது அதற்கு போலீசார் உடைய ஆதரவு இருந்தது போல தான் எனக்கு தெரிந்தது.

இவ்வாறான விடயங்களை வைத்து பார்க்கின்றபோது மீண்டும் நாங்கள் சர்வதேச நாணய நிதியத்தினுடைய பரிந்துரைகளை சரியாக நடைமுறைப்படுத்தாமல் போய் இந்த நாடு பொருளாதார ரீதியாக இன்னமும் சிக்கலை முகம்கொடுக்கின்ற போது மதரீதியாக ஒரு வன்முறையை குழப்பத்தை உண்டாக்கி அதனை பயன்படுத்தி அதன் ஊடாக ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுக்கலாம் அதிலேயே கொடுத்து வெற்றி பெறலாம் என்கின்ற நம்பிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு இருக்கா என்ற கேள்வி இன்று எனக்கு இருக்கின்றது.

அதேபோன்றுதான் எங்களுடைய மாவட்டத்தை பொறுத்தளவில் கூட எங்களது மாவட்டதிலே பல சவால்கள் பல சிக்கல்கள் நடந்து கொண்டிருக்கின்றது. நேற்றைய தினம் கூட மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்றது. இந்த அபிவிருத்தி குழு கூட்டத்தை பொறுத்தவரையில் மாவட்டத்திலே பெருமளவாக முகம்கொடுக்கின்ற பிரச்சனை மகாவலி அதிகார சபை சம்பந்தப்பட்ட பிரச்சனை. ஆனால் மகாவலி அதிகார சபையினுடைய பிரதிநிதிகள் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பது எனக்கு முன்கூட்டியே தெரிந்த ஒரு விடயம.; அதற்கான காரணம் அவர்களுடைய நிலைப்பாடு மகாவலி அதிகார சபை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை,மாவட்ட அரசாங்க அதிபருக்கு அவர்களை கட்டுப்படுத்த முடியாது, மகாவலி அதிகார சபை என்பது ஒரு தனியான சட்டமூலம் ஊடாக உருவாக்கப்பட்ட ஒரு விடயம் மகாவலி காணியிலே அமைச்சர் நினைத்தால் எதையும் செய்யலாம் என்கின்ற அவர்களுடைய மன நிலையாக இருக்கின்றது.

மகாவலி காணிகளை பொறுத்தளவில் மகாவலி காணிகளில் பாரிய அளவிலே எங்களுடைய மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் பாரி அளவிலே காணி அபகரிப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த விடயங்களுக்கு எதிராக நாங்கள் நீதிமன்றங்களை நாடி நீதிமன்றங்களிலே இவர்களை அகற்றுமாறு தீர்ப்பு வந்திருந்தது. ஆனால் அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் கூட இன்று வரைக்கும் மகாவலி அதிகார சபை இருக்கு என்று சொன்னால் இது இலங்கை அரசாங்கத்தினுடைய 48 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்ததில் இருந்து வடக்கு கிழக்கிலே எங்களுடைய மக்களினுடைய எண்ணிக்கையை குறைக்கும் ஒரு விடயமாகத்தான் தொடர்ந்து இவர்கள் இதனை முன்னெடுக்கின்றார்கள்.

இதேபோன்றுதான் மாவட்டத்தில் ஊடகங்களைப் பொறுத்தளவில் ஊடகவியலாளர்களை கூட மாவட்ட அலுவலகத்துக்குள்ளே அரசாங்க அதிபர் அனுமதிக்கவில்லை நான் பார்த்திருந்தேன் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் தான் தலைவர் மாவட்ட செயலாளர் ஒரு சர்வதேச ரீதியாக அங்கீகாரம் கிடைத்த ஒரு ஊடகவியலாளரை ஊடகவியலாளர் இல்லை என்று சொல்வதும் அதேபோன்றுதான் அந்த ஊடகவியலாளரை மிக மோசமான வகையிலே கூட்டங்கள் நடக்கும் பொழுது பேசுவதும் இவ்வாறான விடயங்கள் இந்த  மாவட்டத்தில் நடக்கும் அராஜகம் அரசுக்கு தேவையான விடயங்களை நடைமுறைப்படுத்தும் போது தமிழ் மக்களை காப்பாற்ற போகின்றோம், தமிழ் மக்களை மீட்க போகின்றோம், கிழக்கு மாகாணத்தை மீட்க போகின்றோம் என்று சொல்லி வந்தவர்கள் தாங்கள் செய்யும் பிழைகளை சுட்டிக்காட்டும் ஊடகவியலாளர்களை அடக்குவது உண்மையிலே ஜனநாயக விரோதமான செயல்பாடு. இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எதிர்வரும் வாரம் ஊடக அமைச்சருடைய ஆலோசனை கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக பேசுவதற்கு இருக்கின்றேன்.

ஆனால் மாவட்டத்திலே மாவட்ட மக்கள் அராஜகத்தை விரும்பும் கொலை கொள்ளை போன்ற குற்றச்சாட்டில் இருக்கும் ஒருவரை மாவட்டத்திலே வாக்குகளை கொடுத்து பாராளுமன்றத்துக்கே அனுப்புவதினால் ஏற்பட்ட பின்பு விளைவுகளே இவை. எதிர்காலத்திலே எங்களுடைய மக்கள் நினைத்தால் எங்களுடைய மாவட்டத்திற்கு நட்பெயர் வரக்கூடிய வகையிலான எங்களுடைய மக்கள் தங்களை மாற்றிக் கொள்ளலாம் என்பதனை கூறலாம்.

வடக்கு கிழக்கிலே மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து விடுதலை போராட்டம் கூட மழுங்கடிக்கப்பட்டது என்று கூட ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. சர்வதேச ரீதியாக நாங்கள் செல்லும் பொழுது கூட மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என்று சொன்னால் இவர்களுடைய தவறுகளால் இவர்கள் செய்த காட்டிக் கொடுப்புகளின் காரணத்தினால் மட்டக்களப்பு மக்களுக்கு தொடர்ந்து ஒரு அவப்பெயர் தான் இருக்கின்றது. இந்த அவப்பெயரை இன்னும் நாங்கள் அதிகரிக்கும் வகையாக இந்த மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் போன்றவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது ஒரு பெரிய தவறு. நாங்கள் இருவரும் காலங்களில் இந்த தவறை நிவர்த்தி செய்ய வேண்டும் இந்த இடத்திலேயே முக்கியமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தல் கூட இன்னமும் கூட ஜனாதிபதி நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்றார.; உண்மையிலே இந்த தேர்தலுக்கு நடத்த வேண்டும் என்று நீதிமன்றங்களுக்கு சென்றபோது நீதிமன்றங்கள் தேர்தலுக்கு நிதியை ஒதுக்குமாறு ஒரு தீர்மானம் அல்லது ஒரு உத்தரவை வழங்கியிருந்தார்கள். அந்த தீர்மானத்தை கொடுத்த நீதிபதிகளை பாராளுமன்ற சிறப்புரிமை பாராளுமன்றத்திற்கு இருக்கும் அதிகாரங்களை இந்த நீதி அரசர்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று அவர்களை பாராளுமன்றத்திற்கு சிறப்புரிமையை மீறப்பட்டது என்று அழைத்திருக்கின்றார்கள். இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டும் என்று சொன்னால் தேர்தல் நடத்தத்தான் வேண்டும் ஆனால் ஜனநாயக விரோதமான முறையிலே ஒரு ஜனாதிபதி செயற்படும்போது தேர்தல் இவ்வாறு பிற்போடுபடலாம்.

இந்த உள்ளூராட்சி தேர்தலை பிற்போட்ட நேரத்தில் நான் ஜனாதிபதியிடம் பாராளுமன்றத்தில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தேன். நீங்கள் இனிவரும் காலங்களிலே இந்த பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலை பிற்போட கூடிய ஒருவராக நீங்கள் இருப்பீர்கள் தானே என்று கேட்டபோது இதே தொடர்பிலே இலங்கை அரசியல் யாப்பில் ஒரு பக்கத்தை வாசித்துச் சொன்னார் இல்லை ஜனாதிபதி தேர்தலை அவ்வாறு பிற்போடமுடியாது அது குறிப்பிட்ட நேரத்தில் நடக்கத்தான் வேண்டும் என்று.

 பாராளுமன்றத்தை பொறுத்த அளவிலே உண்மையில் 2025 ஆம் ஆண்டு எட்டாம் மாதம் வரைக்கும் இந்த பாராளுமன்றத்துக்கு உரிய காலப்பகுதி இருக்கின்றது. ஜனாதிபதி நினைத்தால் மாத்திரமே அந்த பாராளுமன்றத்தை கலைக்க முடியும். அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அதனை கலைக்க வேண்டும் ஆனால் மீண்டும் பாராளுமன்றத்தை தெரிவி செய்யப்பட மாட்டோம் என்று சொல்லப்படுகின்ற ஆடு மாடுகளுக்கு ரீதியாக எங்களுடைய மாவட்டத்திலே தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற போன்றவர்கள் எல்லாம் இவ்வாறான பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஆதரவாக ஒரு பொழுதும் இருக்க மாட்டார்கள்.

மாகாண சபை தேர்தலைப் பொறுத்த வரையிலே மாகாண சபை தேர்தல் என்பது ஒரு பாராளுமன்றத்திலேயே தனிநபர் பிரேரணை ஊடாக சுமந்திரன் அவர்கள் முன்வைத்த ஒரு பிரேரணை அது நீதிமன்றங்களுக்கும் சென்று பாராளுமன்றத்தில் அது வந்திருக்கின்றது. 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் அதை ஒரு சட்டமாக நிறைவேற்றினால் மாகாண சபை தேர்தல் கூட உடனே நடத்தலாம். ஆனால் ஜனநாயக விரோதமாக செயல்படும் ஒரு ஜனாதிபதி ஜனநாயக ரீதியாக மக்களுக்கு தீர்மானத்தை வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை இந்த ஜனாதிபதி தேர்தலை தவிர்த்து ஏனைய தேர்தல் ஊடாக சந்தர்ப்பம் வழங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.




பௌத்த மக்களையும் தமிழ் மக்களையும் முறுகல் நிலைக்குள் கொண்டுசென்று தாங்கள் ஆட்சிக்கு வரமுயற்சி. இரா. சாணக்கியன்.samugammedia பௌத்த மக்களையும் தமிழ் மக்களையும் ஒரு முறுகல் நிலைக்குள் கொண்டுசென்று தாங்கள் ஆட்சிக்கு வரலாமா என்கின்ற ஆய்வு செய்வதற்கான முதல்கட்டபடியாக வடக்கு கிழக்கிலே இந்த சில சம்பவங்களை பார்க்க கூடியதாக இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இக்கருத்துகளை அவர் முன்வைத்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த இரு வாரங்களாக மாவட்டத்திலே இடம்பெறும் விடயங்களை அவதானிக்கின்ற போது குறிப்பாக மாவட்டம் மட்டுமல்ல வடக்கு கிழக்கு நாடளாவிய ரீதியிலே நடைபெறும் விடயங்களை பார்க்கின்ற போது நான் ஒரு இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழர்களுக்கு ஒரு மிகவும் இறுக்கமான ஆபத்தான காலம் உருவாகலாம் என குறிப்பிட்டு இருந்தேன், அது தற்பொழுது நான் அன்று குறிப்பிட்ட விடயங்கள் நடைமுறையிலே காணக்கூடியதாக இருக்கின்றது. ஆரம்பகட்ட வேலைகள் ஆரம்பித்திருப்பதாக காணக் கூடியதாக இருக்கின்றது.இவை அனைத்திற்கும் பிரதானமான காரணம் வடக்கு கிழக்கில் அன்மை காலமாக மதரீதியாக பிக்குமாருக்கும் இந்துக்குருமாருக்கு இடையில் இடம்பெறும் விடயங்கள், அண்மையில் கூட திருகோணமலையில் ஜனாதிபதியும் இந்தியாவும் செய்த சில ஒப்பந்தங்களைப் பற்றி சில ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இவ்வாறாக இந்த விடயங்களை அவதானிக்கும் போது முல்லைத்தீவு மாவட்டத்திலே குறுந்தூர் மலையிலே மாபெரும் எதிர்ப்பு பேரணியிலேயே தமிழ் மக்கள் ஈடுபட வேண்டியதாக வந்தது, பிக்குமார் அந்த இடத்திற்கு வந்தது அதனைத் தொடர்ந்து திருகோணமலையில் ஆளுனருடைய அலுவலகத்துக்குள் அடாவடித்தனமாக பிக்குமார்கள் சென்றபோது அந்த விகாரை கட்டுவதை ஒரு பெரிய பூகம்பமாக தெற்கிலே பரபரப்பாக செய்திகளை வெளியிடுவதும். இதிலும் குறிப்பாக டி.என்.எல் என அழைக்கப்படும் ஊடகம் அதுவும் ஜனாதிபதியின் ரணில் விக்ரமசிங்கவினுடைய சகோதரனுடைய ஊடகம். புதிதாக முகப்புத்தக பக்கம் ஒன்றினை திறந்து அதிலே குறிப்பிட்ட அளவில் பிக்குமார்களுக்கும் வடக்குக் கிழக்கிலே நடக்கும் பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் வழங்குவதையும் அதேபோன்றுதான் மகாவலி காணிகளுக்குள்ளே சென்ற மட்டக்களப்பு மாவட்ட மததத்தலைவர்களை பலாத்காரமாக 5, 6 மணித்தியாலங்கள் அந்த இடத்திலேயே பலத்காரமாக தடுத்து வைத்திருந்தது, யாழ்ப்பாணத்திலேயே தையிட்டியிலே இடம்பெறும் பிரச்சனை, வவுனியாவில் வெடுக்குநாறியில் பிரச்சனை இவ்வாறாக நாங்கள் தொடர்ச்சியாகவே இந்த பிரச்சினைகளை கூறிக்கொண்டு போகலாம். இவை அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நான் சொன்னது போல இவை அனைத்தும் ஒரு பாரிய திட்டத்தின் உடைய ஆரம்பமாக இருக்கலாம் என சந்திக்கக்கூடியதாக இருக்கின்றது.நாட்டிலே மக்கள் மத்தியிலே எரிபொருள் தட்டுப்பாடு இல்லாமல் போனது, மின்வெட்டு நிறுத்தப்பட்டது போன்ற விடயங்களுக்கு கடந்த ஒரு வருடமாக எதுவாக இருந்தாலும் ரணில் விக்கிரமசிங்கமினுடைய ஆட்சியிலே மின்சாரம் துண்டிக்கப்படவில்லை, எரிபொருள் தட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது, எரிவாயு இருக்கின்றது என்று எல்லாம் மக்கள் ஒரு அளவு தங்களுடைய வாழ்க்கையிலே பிரச்சினை குறைந்தது என்று ஒரு மனநிலை இருந்தாலும் கூட எதிர்வரும் வருடத்தில் குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்திலே முன்வைத்த விடயங்களை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட போகின்றார்கள் என்பது உறுதியாக தெரிகின்றது.உள்நாட்டு கடன் மறு சீரமைப்பு சரியாக அவர்களால் செய்து முடிக்க முடியாத ஒரு காரணம் இருக்கும். ஈ .பி.எப், ஈ.டி.எப் ஓய்வு பெற்ற எமது உறவுகளுடைய அந்த நிதியிலே கை வைப்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைத்த சில நிபந்தனைகளை இலங்கை அரசாங்கத்தினால் அடைய முடியாத ஒரு சூழல் காணக் கூடியதாக இருக்கும்.அவ்வாறு நடந்தால் எதிர்வரும் வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் முகம் கொடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு தான் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியதாக காட்டி மக்களுடைய வாக்களை பெற முடியாத சூழல் அமையலாம்.அதற்காகத்தான் இந்த 13வது திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டுக்குள்ளே குழப்ப நிலையினை உருவாக்குவதற்கு இந்த சர்வ கட்சி மாநாட்டுகளை நடத்தி, அவர் எதிர்பார்த்த வண்ணம் அந்த 13 வது திருத்தச் சட்ட விடயம் மாபெரும் பூகம்பமாக மாறவில்லை. இந்த விடயங்களை வைத்துப் பார்க்கின்ற போது நிச்சயமாக எதிர்வரும் காலங்களிலேயே ஒரு பௌத்த, இந்து சமய வழிபாடு செய்யும் மக்களுக்கு இடையிலான சில முரண்பாடுகளை வளர்த்து. இந்த நாடு தமிழ் சிங்களம் என்று சொல்லி கடந்த காலத்திலேயே இனரீதியாக ஒரு முறுகல் நிலை இருந்ததை தற்பொழுதும் இருக்கின்றது சமத்துவம் இல்லாத பிரச்சனை ஆனால் அதனை வைத்து மீண்டும் ஒரு தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கு அவர் சில நேரம் கஷ்டமாக இருக்கலாம்.அதேபோன்றுதான் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக இடம் பெற்ற வன்முறைகள் தர்கா நகர், அளுத்கம, திகன போன்ற இடங்களில் இஸ்லாமிய மக்களை கூறி வைத்து தாக்கி சில விடயங்களை வைத்து ஈஸ்டர் குண்டு வெடிப்பு போன்ற விடயங்களை வைத்தே கடந்த தேர்தலில் வெற்றிபெற்றார்கள். இம்முறையும் மக்கள் இந்த பொய்யை மீண்டும் நம்புவார்களா என்ற சந்தேகம் இருக்கின்ற காரணத்தினால் முதல்முறையாக சைவ சமய வழிபாடு செய்யும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் பௌத்த மதத்தை பின்பற்றும் சிங்கள மக்களையும் ஒரு முறுகல் நிலைக்கும் தள்ளிவிட்டால் இதை வைத்துக்கொண்டு தாங்கள் ஆட்சிக்கு வரலாமா என்கின்ற ஆய்வு செய்வதற்கான முதல்கட்டபடியாக தான் கடந்த மாதத்துக்குள்ளே நாங்கள் வடக்கு கிழக்கிலே இந்த சில சம்பவங்களை பார்க்க கூடியதாக இருக்கும்.மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் இதிலேயே மிகவும் குறிப்பாக அண்மையில் கூட கஜேந்திரகுமார் அவர்களுடைய வீட்டிற்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்ட பொழுது உங்களுக்கு தெரியும் கொழும்பிலே எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும் அரசுக்கு எதிராக போராட்டம் என்று கூறினால் தண்ணீர் தாரைகள் போலீசார் பயன்படுத்துவது இவ்வாறாக போலீசார் நினைத்தால் ஜனாதிபதி விரும்பினால் போராட்டங்களை தடை செய்து முற்றாக நிறுத்தக்கூடிய அளவு இருக்கிறார்கள். ஆனால் கஜேந்திரகுமார் இன் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் உதயகம்மன்பில சார்பாக முன்னெடுத்த போது அதற்கு போலீசார் உடைய ஆதரவு இருந்தது போல தான் எனக்கு தெரிந்தது.இவ்வாறான விடயங்களை வைத்து பார்க்கின்றபோது மீண்டும் நாங்கள் சர்வதேச நாணய நிதியத்தினுடைய பரிந்துரைகளை சரியாக நடைமுறைப்படுத்தாமல் போய் இந்த நாடு பொருளாதார ரீதியாக இன்னமும் சிக்கலை முகம்கொடுக்கின்ற போது மதரீதியாக ஒரு வன்முறையை குழப்பத்தை உண்டாக்கி அதனை பயன்படுத்தி அதன் ஊடாக ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுக்கலாம் அதிலேயே கொடுத்து வெற்றி பெறலாம் என்கின்ற நம்பிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு இருக்கா என்ற கேள்வி இன்று எனக்கு இருக்கின்றது.அதேபோன்றுதான் எங்களுடைய மாவட்டத்தை பொறுத்தளவில் கூட எங்களது மாவட்டதிலே பல சவால்கள் பல சிக்கல்கள் நடந்து கொண்டிருக்கின்றது. நேற்றைய தினம் கூட மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்றது. இந்த அபிவிருத்தி குழு கூட்டத்தை பொறுத்தவரையில் மாவட்டத்திலே பெருமளவாக முகம்கொடுக்கின்ற பிரச்சனை மகாவலி அதிகார சபை சம்பந்தப்பட்ட பிரச்சனை. ஆனால் மகாவலி அதிகார சபையினுடைய பிரதிநிதிகள் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பது எனக்கு முன்கூட்டியே தெரிந்த ஒரு விடயம.; அதற்கான காரணம் அவர்களுடைய நிலைப்பாடு மகாவலி அதிகார சபை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை,மாவட்ட அரசாங்க அதிபருக்கு அவர்களை கட்டுப்படுத்த முடியாது, மகாவலி அதிகார சபை என்பது ஒரு தனியான சட்டமூலம் ஊடாக உருவாக்கப்பட்ட ஒரு விடயம் மகாவலி காணியிலே அமைச்சர் நினைத்தால் எதையும் செய்யலாம் என்கின்ற அவர்களுடைய மன நிலையாக இருக்கின்றது.மகாவலி காணிகளை பொறுத்தளவில் மகாவலி காணிகளில் பாரிய அளவிலே எங்களுடைய மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் பாரி அளவிலே காணி அபகரிப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த விடயங்களுக்கு எதிராக நாங்கள் நீதிமன்றங்களை நாடி நீதிமன்றங்களிலே இவர்களை அகற்றுமாறு தீர்ப்பு வந்திருந்தது. ஆனால் அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் கூட இன்று வரைக்கும் மகாவலி அதிகார சபை இருக்கு என்று சொன்னால் இது இலங்கை அரசாங்கத்தினுடைய 48 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்ததில் இருந்து வடக்கு கிழக்கிலே எங்களுடைய மக்களினுடைய எண்ணிக்கையை குறைக்கும் ஒரு விடயமாகத்தான் தொடர்ந்து இவர்கள் இதனை முன்னெடுக்கின்றார்கள்.இதேபோன்றுதான் மாவட்டத்தில் ஊடகங்களைப் பொறுத்தளவில் ஊடகவியலாளர்களை கூட மாவட்ட அலுவலகத்துக்குள்ளே அரசாங்க அதிபர் அனுமதிக்கவில்லை நான் பார்த்திருந்தேன் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் தான் தலைவர் மாவட்ட செயலாளர் ஒரு சர்வதேச ரீதியாக அங்கீகாரம் கிடைத்த ஒரு ஊடகவியலாளரை ஊடகவியலாளர் இல்லை என்று சொல்வதும் அதேபோன்றுதான் அந்த ஊடகவியலாளரை மிக மோசமான வகையிலே கூட்டங்கள் நடக்கும் பொழுது பேசுவதும் இவ்வாறான விடயங்கள் இந்த  மாவட்டத்தில் நடக்கும் அராஜகம் அரசுக்கு தேவையான விடயங்களை நடைமுறைப்படுத்தும் போது தமிழ் மக்களை காப்பாற்ற போகின்றோம், தமிழ் மக்களை மீட்க போகின்றோம், கிழக்கு மாகாணத்தை மீட்க போகின்றோம் என்று சொல்லி வந்தவர்கள் தாங்கள் செய்யும் பிழைகளை சுட்டிக்காட்டும் ஊடகவியலாளர்களை அடக்குவது உண்மையிலே ஜனநாயக விரோதமான செயல்பாடு. இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எதிர்வரும் வாரம் ஊடக அமைச்சருடைய ஆலோசனை கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக பேசுவதற்கு இருக்கின்றேன்.ஆனால் மாவட்டத்திலே மாவட்ட மக்கள் அராஜகத்தை விரும்பும் கொலை கொள்ளை போன்ற குற்றச்சாட்டில் இருக்கும் ஒருவரை மாவட்டத்திலே வாக்குகளை கொடுத்து பாராளுமன்றத்துக்கே அனுப்புவதினால் ஏற்பட்ட பின்பு விளைவுகளே இவை. எதிர்காலத்திலே எங்களுடைய மக்கள் நினைத்தால் எங்களுடைய மாவட்டத்திற்கு நட்பெயர் வரக்கூடிய வகையிலான எங்களுடைய மக்கள் தங்களை மாற்றிக் கொள்ளலாம் என்பதனை கூறலாம்.வடக்கு கிழக்கிலே மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து விடுதலை போராட்டம் கூட மழுங்கடிக்கப்பட்டது என்று கூட ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. சர்வதேச ரீதியாக நாங்கள் செல்லும் பொழுது கூட மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என்று சொன்னால் இவர்களுடைய தவறுகளால் இவர்கள் செய்த காட்டிக் கொடுப்புகளின் காரணத்தினால் மட்டக்களப்பு மக்களுக்கு தொடர்ந்து ஒரு அவப்பெயர் தான் இருக்கின்றது. இந்த அவப்பெயரை இன்னும் நாங்கள் அதிகரிக்கும் வகையாக இந்த மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் போன்றவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது ஒரு பெரிய தவறு. நாங்கள் இருவரும் காலங்களில் இந்த தவறை நிவர்த்தி செய்ய வேண்டும் இந்த இடத்திலேயே முக்கியமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.இந்த வருடம் ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தல் கூட இன்னமும் கூட ஜனாதிபதி நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்றார.; உண்மையிலே இந்த தேர்தலுக்கு நடத்த வேண்டும் என்று நீதிமன்றங்களுக்கு சென்றபோது நீதிமன்றங்கள் தேர்தலுக்கு நிதியை ஒதுக்குமாறு ஒரு தீர்மானம் அல்லது ஒரு உத்தரவை வழங்கியிருந்தார்கள். அந்த தீர்மானத்தை கொடுத்த நீதிபதிகளை பாராளுமன்ற சிறப்புரிமை பாராளுமன்றத்திற்கு இருக்கும் அதிகாரங்களை இந்த நீதி அரசர்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று அவர்களை பாராளுமன்றத்திற்கு சிறப்புரிமையை மீறப்பட்டது என்று அழைத்திருக்கின்றார்கள். இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டும் என்று சொன்னால் தேர்தல் நடத்தத்தான் வேண்டும் ஆனால் ஜனநாயக விரோதமான முறையிலே ஒரு ஜனாதிபதி செயற்படும்போது தேர்தல் இவ்வாறு பிற்போடுபடலாம்.இந்த உள்ளூராட்சி தேர்தலை பிற்போட்ட நேரத்தில் நான் ஜனாதிபதியிடம் பாராளுமன்றத்தில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தேன். நீங்கள் இனிவரும் காலங்களிலே இந்த பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலை பிற்போட கூடிய ஒருவராக நீங்கள் இருப்பீர்கள் தானே என்று கேட்டபோது இதே தொடர்பிலே இலங்கை அரசியல் யாப்பில் ஒரு பக்கத்தை வாசித்துச் சொன்னார் இல்லை ஜனாதிபதி தேர்தலை அவ்வாறு பிற்போடமுடியாது அது குறிப்பிட்ட நேரத்தில் நடக்கத்தான் வேண்டும் என்று. பாராளுமன்றத்தை பொறுத்த அளவிலே உண்மையில் 2025 ஆம் ஆண்டு எட்டாம் மாதம் வரைக்கும் இந்த பாராளுமன்றத்துக்கு உரிய காலப்பகுதி இருக்கின்றது. ஜனாதிபதி நினைத்தால் மாத்திரமே அந்த பாராளுமன்றத்தை கலைக்க முடியும். அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அதனை கலைக்க வேண்டும் ஆனால் மீண்டும் பாராளுமன்றத்தை தெரிவி செய்யப்பட மாட்டோம் என்று சொல்லப்படுகின்ற ஆடு மாடுகளுக்கு ரீதியாக எங்களுடைய மாவட்டத்திலே தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற போன்றவர்கள் எல்லாம் இவ்வாறான பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஆதரவாக ஒரு பொழுதும் இருக்க மாட்டார்கள்.மாகாண சபை தேர்தலைப் பொறுத்த வரையிலே மாகாண சபை தேர்தல் என்பது ஒரு பாராளுமன்றத்திலேயே தனிநபர் பிரேரணை ஊடாக சுமந்திரன் அவர்கள் முன்வைத்த ஒரு பிரேரணை அது நீதிமன்றங்களுக்கும் சென்று பாராளுமன்றத்தில் அது வந்திருக்கின்றது. 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் அதை ஒரு சட்டமாக நிறைவேற்றினால் மாகாண சபை தேர்தல் கூட உடனே நடத்தலாம். ஆனால் ஜனநாயக விரோதமாக செயல்படும் ஒரு ஜனாதிபதி ஜனநாயக ரீதியாக மக்களுக்கு தீர்மானத்தை வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை இந்த ஜனாதிபதி தேர்தலை தவிர்த்து ஏனைய தேர்தல் ஊடாக சந்தர்ப்பம் வழங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement