• Nov 25 2024

ஒற்றுமையாக, சமாதானமாக இருப்போம் என்றபெயரிலே எங்களுடைய நிலத்தை ஆக்கிமிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் - ஸ்ரீபிரசாத்

Tharmini / Oct 29th 2024, 11:55 am
image

திருகோணமலை சிவன்கோவிலடியில் நேற்று(28) நடைபெற்ற, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.  இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின், மாவட்ட செயலாளர், வேட்பாளருமான ஸ்ரீபிரசாத் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கின்றது அனுரதரப்பும் அதே தொல்லியல் திணைக்களத்தின் ஊடாகவும் எங்களுடைய நிலங்களை ஆக்கிரமிக்கின்ற வேலைத் திட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

திருகோணமலையில் பிரதானமாக இருக்கின்ற ஒரு பாடசாலையின் வளவில் மண்போட்டுப் பரவுகின்ற நடவடிக்கைக்குக் கூட தம்மிடம் அனுமதி எடுக்க வேண்டும் என்கின்ற ஒரு கட்டளையைப் பிறப்பித்து நிறுத்தியிருக்கின்றது.

தங்களுடைய அதே முகத்தை சிங்கள பௌத்த பேரின வாதத்தின் N.D.P.  , புல்மோட்டைப் பகுதியில் அதே நிலைமை அதேமாதிரி பெரியகுளம் பொரளகந்த ரயமகா விகாரை என்ற பெயரிலும் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு புத்தர் சிலைள் வைக்கப்பட்டுள்ளது.

அவர்களுடைய ஆக்கிரமிப்பு வடிவம் தமிழ் மக்களுடைய தோளில் கையைப்போட்டு ஒற்றுமையாக இருப்போம் சமாதானமாக இருப்போம் என்றபெயரிலே எங்களுடைய நிலத்தை ஆக்கிமிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஜே.வி.பி.அமைப்பு கடந்த காலங்களில் எப்படி நடந்து கொண்டது என்பதை நாம் மீட்டிப் பார்க்கவேண்டும். இதே ஜே.வி.பி அமைப்பு கடற்றொழில் செய்கின்ற மக்கள் பிரதானமாக சுனாமியால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். 

சுனாமியால்  அதிகமாகப் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்காகக் கொண்டுவரப்பட்ட நிவாரண உதவிகளை, ஒரு உதவி செய்யும் வகையில் நிவாரணமாகக்  கொண்டுவரப்பட்ட அந்த உதவித் திட்டங்களைக் கூட ஜே.வி.பி. தடுத்து.

கடற்றொழிளாளர்களுக்குரிய நிவாரணங்களைத் தடுத்து நிறுத்தியிருந்த அதே தரப்புத்தான் இன்று வடகிழக்கைப் பிரித்தது.

இந்தத் தரப்பு இன்றைக்கு நாங்கள் எல்லோரும் ஒற்றுமை என்று சொல்லி எங்களுடைய தோளில் கைபோட்டுக் கொண்டு எங்களுடைய நிலத்தை ஆக்கிமிக்க வந்திருக்கின்றது. இதனைத் தமிழ் மக்கள் புரிந்து கொண்டு இந்த ஜே.வி.பி. தரப்பை அன்னியப் படுத்தவேண்டும்.

அவர்களுடைய பசப்பு வார்த்தைகளை நம்பி எங்களுடைய தமிழ் பிரதிநிதித்துவத்தை அல்லது தமிழ் பிரதிநிதித்துவத்திற்கு வரவேண்டிய வாக்குகளை பிழையான தரப்புக்களுக்குக் கொடுத்து எங்கள் தலையில் நாங்கள் மண் அள்ளிப்போட்டுவிடக் கூடாது என்று, திருகோணமலை வாழ் மக்களிடமும் வடகிழக்கு வாழ் மக்களிடமும் நாங்கள் ஒரு கோரிக்கையாக முன்வைக்கின்றோம்.

இந்தத் தரப்புகள் சிங்கள பேரினவாதத்தின் ஒரு முகம் அவர்கள் இனப்படுகொலைக் குற்றவாளிகள்.  இன்றைக்குத் தமிழ் மக்களை அணுகுவதற்காக இந்த வேசத்தில் வருகிறார்கள் என்பதையும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

ஒற்றுமையாக, சமாதானமாக இருப்போம் என்றபெயரிலே எங்களுடைய நிலத்தை ஆக்கிமிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் - ஸ்ரீபிரசாத் திருகோணமலை சிவன்கோவிலடியில் நேற்று(28) நடைபெற்ற, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.  இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின், மாவட்ட செயலாளர், வேட்பாளருமான ஸ்ரீபிரசாத் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கின்றது அனுரதரப்பும் அதே தொல்லியல் திணைக்களத்தின் ஊடாகவும் எங்களுடைய நிலங்களை ஆக்கிரமிக்கின்ற வேலைத் திட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். திருகோணமலையில் பிரதானமாக இருக்கின்ற ஒரு பாடசாலையின் வளவில் மண்போட்டுப் பரவுகின்ற நடவடிக்கைக்குக் கூட தம்மிடம் அனுமதி எடுக்க வேண்டும் என்கின்ற ஒரு கட்டளையைப் பிறப்பித்து நிறுத்தியிருக்கின்றது. தங்களுடைய அதே முகத்தை சிங்கள பௌத்த பேரின வாதத்தின் N.D.P.  , புல்மோட்டைப் பகுதியில் அதே நிலைமை அதேமாதிரி பெரியகுளம் பொரளகந்த ரயமகா விகாரை என்ற பெயரிலும் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய ஆக்கிரமிப்பு வடிவம் தமிழ் மக்களுடைய தோளில் கையைப்போட்டு ஒற்றுமையாக இருப்போம் சமாதானமாக இருப்போம் என்றபெயரிலே எங்களுடைய நிலத்தை ஆக்கிமிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஜே.வி.பி.அமைப்பு கடந்த காலங்களில் எப்படி நடந்து கொண்டது என்பதை நாம் மீட்டிப் பார்க்கவேண்டும். இதே ஜே.வி.பி அமைப்பு கடற்றொழில் செய்கின்ற மக்கள் பிரதானமாக சுனாமியால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். சுனாமியால்  அதிகமாகப் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்காகக் கொண்டுவரப்பட்ட நிவாரண உதவிகளை, ஒரு உதவி செய்யும் வகையில் நிவாரணமாகக்  கொண்டுவரப்பட்ட அந்த உதவித் திட்டங்களைக் கூட ஜே.வி.பி. தடுத்து.கடற்றொழிளாளர்களுக்குரிய நிவாரணங்களைத் தடுத்து நிறுத்தியிருந்த அதே தரப்புத்தான் இன்று வடகிழக்கைப் பிரித்தது.இந்தத் தரப்பு இன்றைக்கு நாங்கள் எல்லோரும் ஒற்றுமை என்று சொல்லி எங்களுடைய தோளில் கைபோட்டுக் கொண்டு எங்களுடைய நிலத்தை ஆக்கிமிக்க வந்திருக்கின்றது. இதனைத் தமிழ் மக்கள் புரிந்து கொண்டு இந்த ஜே.வி.பி. தரப்பை அன்னியப் படுத்தவேண்டும். அவர்களுடைய பசப்பு வார்த்தைகளை நம்பி எங்களுடைய தமிழ் பிரதிநிதித்துவத்தை அல்லது தமிழ் பிரதிநிதித்துவத்திற்கு வரவேண்டிய வாக்குகளை பிழையான தரப்புக்களுக்குக் கொடுத்து எங்கள் தலையில் நாங்கள் மண் அள்ளிப்போட்டுவிடக் கூடாது என்று, திருகோணமலை வாழ் மக்களிடமும் வடகிழக்கு வாழ் மக்களிடமும் நாங்கள் ஒரு கோரிக்கையாக முன்வைக்கின்றோம். இந்தத் தரப்புகள் சிங்கள பேரினவாதத்தின் ஒரு முகம் அவர்கள் இனப்படுகொலைக் குற்றவாளிகள்.  இன்றைக்குத் தமிழ் மக்களை அணுகுவதற்காக இந்த வேசத்தில் வருகிறார்கள் என்பதையும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

Advertisement

Advertisement

Advertisement