• Feb 12 2025

பொலிஸ் அதிகாரியின் காதைக் கடித்த திருடன் - மடக்கிப்பிடித்த பொலிஸார்

Chithra / Feb 12th 2025, 3:11 pm
image


அனுராதபுரம் புனிதப் பகுதியில் யாத்ரீகர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டபோது, திருடன் பொலிஸ் அதிகாரியின் காது மடலின் ஒரு பகுதியைக் கடித்துள்ளார். 

காயமடைந்த அதிகாரி அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

உடமலுவ பொலிஸ் நிலையத்தை சேர்ந்த துணை இன்ஸ்பெக்டர், 

ருவன்வெலிசேயவிலிருந்து ஸ்ரீ மகா போதிக்கு செல்லும் பாதையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​சந்தேக நபர் ஒரு நீர் சேமிப்பு தொட்டியின் அருகே சுற்றித் திரிவதாக தகவல் கிடைத்தது.

அந்த அதிகாரி அவரைக் கைது செய்ய முயன்றபோது, ​​சந்தேக நபர் அவரது காது மடலின் ஒரு பகுதியைக் கடித்தார். 

இருப்பினும், சம்பவ இடத்திற்கு விரைந்த மற்றொரு அதிகாரியின் உதவியுடன், சந்தேக நபரைக் கைது செய்ய முடிந்தது.  

சந்தேக நபர் அனுராதபுரம் சங்கமித்த மாவத்தையைச் சேர்ந்தவர் ஆவார்.

குற்றவியல் மிரட்டல்,  பொலிஸ் அதிகாரிக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்துதல் மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.  

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸ் தலைமையக கண்காணிப்பாளர் ஆர்.எம். ஜெயவீர மேற்கொண்டு வருகிறார்.

பொலிஸ் அதிகாரியின் காதைக் கடித்த திருடன் - மடக்கிப்பிடித்த பொலிஸார் அனுராதபுரம் புனிதப் பகுதியில் யாத்ரீகர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டபோது, திருடன் பொலிஸ் அதிகாரியின் காது மடலின் ஒரு பகுதியைக் கடித்துள்ளார். காயமடைந்த அதிகாரி அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  உடமலுவ பொலிஸ் நிலையத்தை சேர்ந்த துணை இன்ஸ்பெக்டர், ருவன்வெலிசேயவிலிருந்து ஸ்ரீ மகா போதிக்கு செல்லும் பாதையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​சந்தேக நபர் ஒரு நீர் சேமிப்பு தொட்டியின் அருகே சுற்றித் திரிவதாக தகவல் கிடைத்தது.அந்த அதிகாரி அவரைக் கைது செய்ய முயன்றபோது, ​​சந்தேக நபர் அவரது காது மடலின் ஒரு பகுதியைக் கடித்தார். இருப்பினும், சம்பவ இடத்திற்கு விரைந்த மற்றொரு அதிகாரியின் உதவியுடன், சந்தேக நபரைக் கைது செய்ய முடிந்தது.  சந்தேக நபர் அனுராதபுரம் சங்கமித்த மாவத்தையைச் சேர்ந்தவர் ஆவார்.குற்றவியல் மிரட்டல்,  பொலிஸ் அதிகாரிக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்துதல் மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸ் தலைமையக கண்காணிப்பாளர் ஆர்.எம். ஜெயவீர மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

Advertisement

Advertisement