• Oct 22 2026

திலீபன் சிலை விவகாரம்; கஜேந்திரன், சிறிதரன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சபையில் வெடித்த அர்ச்சுனா

Chithra / Oct 21st 2026, 4:11 pm
image


தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய பயங்கரவாத தடைச்சட்டம் பொதுமக்கள் என வரும் பொழுது வேறு விதமாகவும், அரசியல் தலைவர்கள் என வரும் பொழுது வேறு விதமாகவும் செயற்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,


அகிம்சை வழியில் போராடி உயிரிழந்த தியாக தீபம் திலீபன் சிலை அகற்றல் விவகாரம் கடந்த சில வாரங்களாக தமிழர்கள் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


அதற்கான வழக்கும் யாழ். நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில், சாட்சியங்கள் யாரும் வழக்கில் முன்னிலையாகவில்லை என நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.

 

யாழ். மாநகர சபையின் முதல்வர் மதிவதனி, சிலையை வைப்பதற்கு அனுமதி கோரிய கஜேந்திரன் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோர் சட்டத்திற்கு முன்னர் இதுவரை நிறுத்தப்படவில்லை.


சட்டம் அனைவருக்கும் சமம் எனக் கூறும் அரசாங்கம், இந்த விடயத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டதற்கான காரணம் என்ன? அதேபோன்று, பொதுமக்கள் என வரும் பொழுது அரசாங்கம் வேறு விதமாகவும், அரசியல் தலைவர்கள் என வரும் பொழுது வேறு விதமாகவும் செயற்படுவதாக எனக்குத் தோன்றுகின்றது என்றார்.

 

இந்நிலையில் யாழ்ப்பாணம் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் சிலை நிறுவப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 14 பேரிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.


நல்லூரில் திலீபனின் சிலையை நிறுவுவதற்கான நிதியுதவி வழங்குதல், சிலையை நிர்மாணித்தல், அதனை விளம்பரப்படுத்துதல் மற்றும் சிலை திறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் 14 பேரிடமே இவ்வாறு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், திலீபன் தடை செய்யப்பட்ட  அமைப்பின் உறுப்பினராக இருந்தவர் என்பது விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


மேலும், நல்லூரில் நிறுவப்பட்டிருந்த திலீபனின் சிலையைப் பொலிஸார் கைப்பற்றி, வழக்குப் பொருளாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

திலீபன் சிலை விவகாரம்; கஜேந்திரன், சிறிதரன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் சபையில் வெடித்த அர்ச்சுனா தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய பயங்கரவாத தடைச்சட்டம் பொதுமக்கள் என வரும் பொழுது வேறு விதமாகவும், அரசியல் தலைவர்கள் என வரும் பொழுது வேறு விதமாகவும் செயற்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,அகிம்சை வழியில் போராடி உயிரிழந்த தியாக தீபம் திலீபன் சிலை அகற்றல் விவகாரம் கடந்த சில வாரங்களாக தமிழர்கள் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.அதற்கான வழக்கும் யாழ். நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில், சாட்சியங்கள் யாரும் வழக்கில் முன்னிலையாகவில்லை என நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது. யாழ். மாநகர சபையின் முதல்வர் மதிவதனி, சிலையை வைப்பதற்கு அனுமதி கோரிய கஜேந்திரன் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோர் சட்டத்திற்கு முன்னர் இதுவரை நிறுத்தப்படவில்லை.சட்டம் அனைவருக்கும் சமம் எனக் கூறும் அரசாங்கம், இந்த விடயத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டதற்கான காரணம் என்ன அதேபோன்று, பொதுமக்கள் என வரும் பொழுது அரசாங்கம் வேறு விதமாகவும், அரசியல் தலைவர்கள் என வரும் பொழுது வேறு விதமாகவும் செயற்படுவதாக எனக்குத் தோன்றுகின்றது என்றார். இந்நிலையில் யாழ்ப்பாணம் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் சிலை நிறுவப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 14 பேரிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.நல்லூரில் திலீபனின் சிலையை நிறுவுவதற்கான நிதியுதவி வழங்குதல், சிலையை நிர்மாணித்தல், அதனை விளம்பரப்படுத்துதல் மற்றும் சிலை திறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் 14 பேரிடமே இவ்வாறு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், திலீபன் தடை செய்யப்பட்ட  அமைப்பின் உறுப்பினராக இருந்தவர் என்பது விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும், நல்லூரில் நிறுவப்பட்டிருந்த திலீபனின் சிலையைப் பொலிஸார் கைப்பற்றி, வழக்குப் பொருளாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement