• May 20 2024

பிரச்சினைக்கு முகங்கொடுக்க முடியாவிட்டால் அவ்வாறான தலைவர்கள் இந்த நாட்டிற்கு தேவைப்படாது- பாலி ரங்கே பண்டார தெரிவிப்பு! samugammedia

Tamil nila / Jun 23rd 2023, 10:18 am
image

Advertisement

பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியாவிட்டால்,பிரச்சினைக்கு முகங்கொடுக்கமுடியாவிட்டால் அவ்வாறான தலைவர்கள் இந்த நாட்டிற்கு தேவைப்படாது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலி ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி கிளையின் மீள்புனரமைப்பு கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் நேற்று மாலை நடைபெற்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அதிகாரமளிக்கப்பட்ட முகவர் எஸ்.சுதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலி பண்டார பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் கிராமிய மட்ட அமைப்பாளர்கள் பலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொண்டனர்.

இதன்போது பட்டிருப்பு தொகுதிக்கான ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாக குழு தெரிவுசெய்யப்பட்டதுடன் ஐக்கிய தேசிய கட்சியின் புனரமைப்பு குறித்தும் கருத்துகள் பகிரப்பட்டன.இங்கு உரையாற்றிய பொதுச்செயலாளர்,

1946ஆம் ஆண்டு அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டு இலங்கையர்களாக இருக்கவேண்டும் என்பதற்காகவே ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மத ரீதியாகவும் இனரீதியாகவும் இந்த நாட்டு மக்கள் பிரிந்து நின்று கட்சிகளை ஆரம்பித்தனர்.இதன்காரணமாக இந்த நாட்டில் மக்கள் பல குழுக்களாக பிரிந்துநின்றனர்.

1948ஆம் ஆண்டுகாலப்பகுதியில் இந்த நாட்டு மக்களிடம் இலங்கையர் என்ற உணர்வுமட்டுமேயிருந்தது.இவர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தியது அரசியல் தலைவர்களாகும்.இதன்காரணமாக இந்த நாடு 75வருடமாக பின்நோக்கியே சென்றது.

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மதங்களாகவும் இனங்களாகவும் மொழிகளாகவும் பிரிந்து அரசியல் ரீதியாக பேதங்களை ஏற்படுத்தினார்கள்.இதன்காரணமாக அரசியல்வாதிகள் பலம்வாய்ந்தவர்களாவும் மக்கள் பின்தங்கிய நிலையினை அடைந்தது மட்டுமே நடந்தது.இன்னும் 25வருடங்களில் இந்த நாடு சுதந்திரம் பெற்று நூறு வருடங்களில் பூர்த்திசெய்கின்றது.

நாங்கள் பிரிந்துநின்று செயற்படுவதா அல்லது 1946ஆம் ஆண்டுகாலப்பகுதியை போன்று ஒரே இனமக்களா இருப்பதா என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும்.சிங்கப்பூர்,மலேசியா போன்று நாடுகளில் அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டு ஒரே நாட்டவர்களாக எழுந்துநிற்கின்ற நிலையிலேயே அங்கு சட்டமும் ஒரேவிதமான அமுல்படுத்தப்படுகின்றது,அங்கு அபிவிருத்திகள் காணப்படுகின்றது.

இந்த நாடு நூற்றாண்டை அண்டையும்போது நாடு முன்னேற்றம் அடைந்த நாடாக அமையவேண்டும்.டிஎஸ்.சேனநாயக்க கட்சியை ஆரம்பித்தபோது இருந்த அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கையானது இன்று ரணில் விக்ரமசிங்கவின் காலத்திலும் கடைப்பிடிக்கப்படுகின்றது.ஜனாதிபதி அவர்கள் இலங்கையில் உள்ள மக்கள் அனைவரையும் இலங்கையர்கள் என்ற அடிப்படையிலேயே நோக்குகின்றார்களே தவிர இனமத வேறுபாடுகளை கொண்டு பார்ப்பதில்லை.

1977ஆம் ஆண்டுகாலப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் மட்டக்களப:பு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.வடகிழக்கிலிருந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.நாங்கள் மீண்டும் அதேயுகத்திற்கு திரும்பிச்செல்லவேண்டும்.

நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டினை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கவேண்டும்.அதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமைத்துவத்தினை எடுத்திருக்கின்றார்.பிரச்சினையொன்று வந்தபோது எல்லா தலைவர்களும் தலையினை மறைத்துக்கொண்டு ஓடிஒளிந்துகொண்டார்கள்.பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியாவிட்டால்,பிரச்சினைக்கு முகங்கொடுக்கமுடியாவிட்டால் அவ்வாறான தலைவர்கள் இந்த நாட்டிற்கு தேவைப்படாது.

இந்த நாட்டில் பல பிரச்சினைகள் இருந்தபோது அந்த பிரச்சினைகளுக்கு வலுமைமிக்க தலைவராக முகம்கொடுத்தது ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க மட்டுமேயாகும்.

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டினை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவுடன் ஒன்றிணையவேண்டும்.ஜனாதிபதி இந்த நாட்டினை பொறுப்பேற்கும்போது இந்த நாடு பாரிய பின்னடைவிலிருந்தது. 

அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிபோல் இருந்த நாட்டினை குறுகிய காலத்தில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருந்து நோயாளியை சாதாரண விடுதிக்கு மாற்றுவதுபோன்று நாட்டினை முன்னேற்றப்பாதைக்கு கொண்டுவந்துள்ளார்.

நன்கு சிகிச்சையளித்து வைத்தியசாலையிலிருந்து வெளியில் கொண்டுவருவதற்கான நடவடிக்கையினையே இன்று ஜனாதிபதி முன்னெடுத்துவருகின்றார்.அதற்கு எதிரான தீர்மானங்கள் எடுக்கப்படுமானால் சாதாரண விடுதிக்கு எடுக்கப்பட்ட நோயாளியை மீண்டும் அதிதீவிர சிகிச்சை பிரிவிற்கு கொண்டுசெல்லும் நிலையினைப்போன்றே நாடுசெல்லும். அதன்காரணமாகவே ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

பிரச்சினைக்கு முகங்கொடுக்க முடியாவிட்டால் அவ்வாறான தலைவர்கள் இந்த நாட்டிற்கு தேவைப்படாது- பாலி ரங்கே பண்டார தெரிவிப்பு samugammedia பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியாவிட்டால்,பிரச்சினைக்கு முகங்கொடுக்கமுடியாவிட்டால் அவ்வாறான தலைவர்கள் இந்த நாட்டிற்கு தேவைப்படாது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலி ரங்கே பண்டார தெரிவித்தார்.ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி கிளையின் மீள்புனரமைப்பு கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் நேற்று மாலை நடைபெற்றது.ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அதிகாரமளிக்கப்பட்ட முகவர் எஸ்.சுதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலி பண்டார பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் கிராமிய மட்ட அமைப்பாளர்கள் பலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொண்டனர்.இதன்போது பட்டிருப்பு தொகுதிக்கான ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாக குழு தெரிவுசெய்யப்பட்டதுடன் ஐக்கிய தேசிய கட்சியின் புனரமைப்பு குறித்தும் கருத்துகள் பகிரப்பட்டன.இங்கு உரையாற்றிய பொதுச்செயலாளர்,1946ஆம் ஆண்டு அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டு இலங்கையர்களாக இருக்கவேண்டும் என்பதற்காகவே ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மத ரீதியாகவும் இனரீதியாகவும் இந்த நாட்டு மக்கள் பிரிந்து நின்று கட்சிகளை ஆரம்பித்தனர்.இதன்காரணமாக இந்த நாட்டில் மக்கள் பல குழுக்களாக பிரிந்துநின்றனர்.1948ஆம் ஆண்டுகாலப்பகுதியில் இந்த நாட்டு மக்களிடம் இலங்கையர் என்ற உணர்வுமட்டுமேயிருந்தது.இவர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தியது அரசியல் தலைவர்களாகும்.இதன்காரணமாக இந்த நாடு 75வருடமாக பின்நோக்கியே சென்றது.சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மதங்களாகவும் இனங்களாகவும் மொழிகளாகவும் பிரிந்து அரசியல் ரீதியாக பேதங்களை ஏற்படுத்தினார்கள்.இதன்காரணமாக அரசியல்வாதிகள் பலம்வாய்ந்தவர்களாவும் மக்கள் பின்தங்கிய நிலையினை அடைந்தது மட்டுமே நடந்தது.இன்னும் 25வருடங்களில் இந்த நாடு சுதந்திரம் பெற்று நூறு வருடங்களில் பூர்த்திசெய்கின்றது.நாங்கள் பிரிந்துநின்று செயற்படுவதா அல்லது 1946ஆம் ஆண்டுகாலப்பகுதியை போன்று ஒரே இனமக்களா இருப்பதா என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும்.சிங்கப்பூர்,மலேசியா போன்று நாடுகளில் அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டு ஒரே நாட்டவர்களாக எழுந்துநிற்கின்ற நிலையிலேயே அங்கு சட்டமும் ஒரேவிதமான அமுல்படுத்தப்படுகின்றது,அங்கு அபிவிருத்திகள் காணப்படுகின்றது.இந்த நாடு நூற்றாண்டை அண்டையும்போது நாடு முன்னேற்றம் அடைந்த நாடாக அமையவேண்டும்.டிஎஸ்.சேனநாயக்க கட்சியை ஆரம்பித்தபோது இருந்த அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கையானது இன்று ரணில் விக்ரமசிங்கவின் காலத்திலும் கடைப்பிடிக்கப்படுகின்றது.ஜனாதிபதி அவர்கள் இலங்கையில் உள்ள மக்கள் அனைவரையும் இலங்கையர்கள் என்ற அடிப்படையிலேயே நோக்குகின்றார்களே தவிர இனமத வேறுபாடுகளை கொண்டு பார்ப்பதில்லை.1977ஆம் ஆண்டுகாலப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் மட்டக்களப:பு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.வடகிழக்கிலிருந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.நாங்கள் மீண்டும் அதேயுகத்திற்கு திரும்பிச்செல்லவேண்டும்.நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டினை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கவேண்டும்.அதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமைத்துவத்தினை எடுத்திருக்கின்றார்.பிரச்சினையொன்று வந்தபோது எல்லா தலைவர்களும் தலையினை மறைத்துக்கொண்டு ஓடிஒளிந்துகொண்டார்கள்.பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியாவிட்டால்,பிரச்சினைக்கு முகங்கொடுக்கமுடியாவிட்டால் அவ்வாறான தலைவர்கள் இந்த நாட்டிற்கு தேவைப்படாது.இந்த நாட்டில் பல பிரச்சினைகள் இருந்தபோது அந்த பிரச்சினைகளுக்கு வலுமைமிக்க தலைவராக முகம்கொடுத்தது ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க மட்டுமேயாகும்.அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டினை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவுடன் ஒன்றிணையவேண்டும்.ஜனாதிபதி இந்த நாட்டினை பொறுப்பேற்கும்போது இந்த நாடு பாரிய பின்னடைவிலிருந்தது. அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிபோல் இருந்த நாட்டினை குறுகிய காலத்தில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருந்து நோயாளியை சாதாரண விடுதிக்கு மாற்றுவதுபோன்று நாட்டினை முன்னேற்றப்பாதைக்கு கொண்டுவந்துள்ளார்.நன்கு சிகிச்சையளித்து வைத்தியசாலையிலிருந்து வெளியில் கொண்டுவருவதற்கான நடவடிக்கையினையே இன்று ஜனாதிபதி முன்னெடுத்துவருகின்றார்.அதற்கு எதிரான தீர்மானங்கள் எடுக்கப்படுமானால் சாதாரண விடுதிக்கு எடுக்கப்பட்ட நோயாளியை மீண்டும் அதிதீவிர சிகிச்சை பிரிவிற்கு கொண்டுசெல்லும் நிலையினைப்போன்றே நாடுசெல்லும். அதன்காரணமாகவே ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

Advertisement

Advertisement

Advertisement