• Nov 22 2024

ரணிலுக்கு ஆதரவு வழங்கியதன் பின்னணி இதுதான்- புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி விளக்கம்..!

Sharmi / Sep 7th 2024, 3:50 pm
image

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முன்வைக்கப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவற்றை செயற்படுத்தி தருவதாக வழங்கிய வாக்குறுதி அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்கான தீர்மனத்தை மேற்கொண்டுள்ளதாக அக் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தை நேற்றையதினம்(06) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

யுத்ததிற்கு பின்னர் சுமார் 12,000 முன்னாள் போராளிகள் வடக்கு கிழக்கில் வாழ்வதாகவும், தமிழ் அரசியல் தலைவர்களோ புலம்பெயர் அமைப்புக்களோ இதுவரை இவர்களுக்கு முழுமையான வாழ்வாதார உதவிகளை வழங்கவில்லை எனவும் அதன் அடிப்படையில் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்பை வழங்குதல், அதே நேரம் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கைது செய்யப்படக்கூடாது,அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்,இந்த நாட்டில் தமிழ் மக்கள் கெளரவமாக வாழ்வதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்தவேண்டும் போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அவற்றை நிறைவேற்றி தருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததை தொடர்ந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி இம் முறை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.


ரணிலுக்கு ஆதரவு வழங்கியதன் பின்னணி இதுதான்- புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி விளக்கம். புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முன்வைக்கப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவற்றை செயற்படுத்தி தருவதாக வழங்கிய வாக்குறுதி அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்கான தீர்மனத்தை மேற்கொண்டுள்ளதாக அக் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார்.புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தை நேற்றையதினம்(06) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யுத்ததிற்கு பின்னர் சுமார் 12,000 முன்னாள் போராளிகள் வடக்கு கிழக்கில் வாழ்வதாகவும், தமிழ் அரசியல் தலைவர்களோ புலம்பெயர் அமைப்புக்களோ இதுவரை இவர்களுக்கு முழுமையான வாழ்வாதார உதவிகளை வழங்கவில்லை எனவும் அதன் அடிப்படையில் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்பை வழங்குதல், அதே நேரம் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கைது செய்யப்படக்கூடாது,அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்,இந்த நாட்டில் தமிழ் மக்கள் கெளரவமாக வாழ்வதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்தவேண்டும் போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அவற்றை நிறைவேற்றி தருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததை தொடர்ந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி இம் முறை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement