• Sep 20 2024

தேர்தல்கள் ஆணைக்குழுவை பயமுறுத்தும் ஜனாதிபதி - திஸ்ஸ அத்தநாயக்க கண்டனம்!

Sharmi / Jan 9th 2023, 9:23 pm
image

Advertisement

ஐக்கிய தேசிய கட்சியுடன் பொதுஜன பெரமுன இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கூட்டணி ஐக்கிய மக்கள் சக்திக்கு சவாலாக அமையாது என கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று எதிர்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

க்கிய மக்கள் சக்தியில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த தேர்தலில் அதிகளவான ஆசனங்களை கைப்பற்ற முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போது உள்ளூராட்சி சபை தொடர்பில் பல்வேறு கதைகளைக் கேட்டு வருகிறோம். அதில் ஒன்று உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு யானைக் கூட்டணி என்று பேசப்படுகிறது. அவர்களால் தனித்து போட்டியிட்டு வெல்லமுடியாது. அது எமக்கு சவாலாக அமையாது. நாட்டை அழித்தவர்களும் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியினரும் எவ்வாறு கிராமங்களுக்கு செல்வார்கள். தற்போது உள்ளுராட்சித் தேர்தலுக்கு பணமில்லை என்ற புதிய வாதம் முன்வைக்கப்படுகிறது.

அது அப்பட்டமான பொய், தேர்தல் மட்டுமல்ல எந்த அரசியல் சாசன தேர்தலுக்கும் பணம் ஒதுக்குவது அரசியலமைப்புக்கு உட்பட்டது. கடந்த வாரம் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்திருந்தார்.

சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களை அழைத்து ஜனாதிபதி எவ்வாறு கலந்துரையாட முடியும். தேர்தலை ஒத்திவைக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஜனாதிபதியின் முயற்சியை வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்தார்.


தேர்தல்கள் ஆணைக்குழுவை பயமுறுத்தும் ஜனாதிபதி - திஸ்ஸ அத்தநாயக்க கண்டனம் ஐக்கிய தேசிய கட்சியுடன் பொதுஜன பெரமுன இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கூட்டணி ஐக்கிய மக்கள் சக்திக்கு சவாலாக அமையாது என கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.இன்று எதிர்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.ஐக்கிய மக்கள் சக்தியில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்த தேர்தலில் அதிகளவான ஆசனங்களை கைப்பற்ற முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தற்போது உள்ளூராட்சி சபை தொடர்பில் பல்வேறு கதைகளைக் கேட்டு வருகிறோம். அதில் ஒன்று உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு யானைக் கூட்டணி என்று பேசப்படுகிறது. அவர்களால் தனித்து போட்டியிட்டு வெல்லமுடியாது. அது எமக்கு சவாலாக அமையாது. நாட்டை அழித்தவர்களும் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியினரும் எவ்வாறு கிராமங்களுக்கு செல்வார்கள். தற்போது உள்ளுராட்சித் தேர்தலுக்கு பணமில்லை என்ற புதிய வாதம் முன்வைக்கப்படுகிறது.அது அப்பட்டமான பொய், தேர்தல் மட்டுமல்ல எந்த அரசியல் சாசன தேர்தலுக்கும் பணம் ஒதுக்குவது அரசியலமைப்புக்கு உட்பட்டது. கடந்த வாரம் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்திருந்தார். சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களை அழைத்து ஜனாதிபதி எவ்வாறு கலந்துரையாட முடியும். தேர்தலை ஒத்திவைக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஜனாதிபதியின் முயற்சியை வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement