• May 20 2024

வயல் நிலங்கள் கருகிப்போய் காணப்படுவதாக தோப்பூர் விவசாயிகள் கவலை! samugammedia

Tamil nila / Jul 3rd 2023, 11:58 am
image

Advertisement

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் - அல்லைக்குளத்தில் நீர்வற்றிய நிலையில் குளத்தில் மரங்கள் வளர்ந்து காடுபோன்று காட்சிதருவதோடு இதனால் வயல் நிலங்கள் கருகிப்போய் காணப்படுவதாக தோப்பூர் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


 தோப்பூர் அல்லைக்குளத்தை நம்பி அல்லைக்குள வெளி, கிரான்வெளி,ஆலயக்குடா,கன்னான்வெளி உள்ளிட்ட வயல் வெளிகளில் சுமார் 275 ஏக்கர்களில் வேளாண்மை செய்கைபண்ணப்பட்டுள்ளது.

தற்போது அல்லைக்குளத்தில் நீர் இல்லாமையால் தமது வேளாண்மைகளுக்கு நீர் இல்லாமல் வேளாண்மை கருகிப்போய் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.


நாங்கள் கஷ்ப்பட்ட ஏழைகள் அங்கும் இங்கும் கடன்பட்டுத்தான் வேளாண்மை செய்கின்றோம்.குளத்தில் தண்ணீர் இல்லாமையால் கதிர் வரும் நேரத்தில் வேளாண்மைகள் பாதிப்படைந்துள்ளது.இப்படியோ போனால் நாங்கள் சாக வேண்டிய நிலைதான் ஏற்படும்.


மேலும் விவசாயிகளின் வியர்வைத்துளிகள் ஒவ்வொன்றும் முத்துக்கள்.இருந்தும் எங்களை யாரும் திரும்பி பார்க்கின்றார்கள் இல்லை. 

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தோப்பூர் அல்லைக்குளத்தை புனரமைத்து நீரை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமென தோப்பூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். 




வயல் நிலங்கள் கருகிப்போய் காணப்படுவதாக தோப்பூர் விவசாயிகள் கவலை samugammedia திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் - அல்லைக்குளத்தில் நீர்வற்றிய நிலையில் குளத்தில் மரங்கள் வளர்ந்து காடுபோன்று காட்சிதருவதோடு இதனால் வயல் நிலங்கள் கருகிப்போய் காணப்படுவதாக தோப்பூர் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். தோப்பூர் அல்லைக்குளத்தை நம்பி அல்லைக்குள வெளி, கிரான்வெளி,ஆலயக்குடா,கன்னான்வெளி உள்ளிட்ட வயல் வெளிகளில் சுமார் 275 ஏக்கர்களில் வேளாண்மை செய்கைபண்ணப்பட்டுள்ளது.தற்போது அல்லைக்குளத்தில் நீர் இல்லாமையால் தமது வேளாண்மைகளுக்கு நீர் இல்லாமல் வேளாண்மை கருகிப்போய் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.நாங்கள் கஷ்ப்பட்ட ஏழைகள் அங்கும் இங்கும் கடன்பட்டுத்தான் வேளாண்மை செய்கின்றோம்.குளத்தில் தண்ணீர் இல்லாமையால் கதிர் வரும் நேரத்தில் வேளாண்மைகள் பாதிப்படைந்துள்ளது.இப்படியோ போனால் நாங்கள் சாக வேண்டிய நிலைதான் ஏற்படும்.மேலும் விவசாயிகளின் வியர்வைத்துளிகள் ஒவ்வொன்றும் முத்துக்கள்.இருந்தும் எங்களை யாரும் திரும்பி பார்க்கின்றார்கள் இல்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தோப்பூர் அல்லைக்குளத்தை புனரமைத்து நீரை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமென தோப்பூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement