• Sep 20 2024

கொடுங்கோல் ஆட்சியின் வலி வேதனைகளை உணர்ந்தவர்களாக போராட்டத்திற்கு கரம் கொடுப்பீர்...!samugammedia

Sharmi / Apr 24th 2023, 2:26 pm
image

Advertisement

நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு நாட்டு மக்களுடன் அனைத்து அமைப்புகளையும் பூரண ஒத்துழைப்பினை தந்துதவுமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இன்றைய  தினம் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் அவர்கள் குறிப்பிடுகையில்,

கடந்த காலத்தில் கொடுங்கோல் அரசாங்கத்தின் பயங்கரவாத சட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் மக்களிற்காக பயங்கரவாத தடை சட்டத்தினை எதிர்த்து வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நாளைய தினம் ( 25) முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு  அனைவரும் ஆதரவினை தருமாறு வேண்டி நிற்கின்றோம்.

இந்த பயங்கரவாத தடை சட்டத்தின் மூலம் வடக்கு கிழக்கு பகுதி வாழ்  மக்கள் மாத்திரமன்றி முஸ்லீம்  மக்களுடன் பெரும்பான்மை இனத்தவரான சிங்களவரும் பாதிக்கப்பட்டுள்ளமை என்பதே வரலாறாகும்.

கொடுங்கோல் ஆட்சியின் கீழ் குறிப்பாக  வடக்கு ,கிழக்க்கில் பயங்கரவாத  அந்த  வலி வேதனைகளை உணர்ந்தவர்களாக அரசியல் காட்சிகள், வர்த்தக சங்கங்கள் மற்றும் அமைப்புகள் என ஒன்றிணைந்து மேற்கொள்ளவுள்ள போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து அமைப்புகளும் இந்த ஹர்த்தாலை முழுவதுமாக கடைபிடிக்கும் என நம்புகின்றோம்.

அத்துடன்,  தனியார் நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் , தனியார் மற்றும் அரச போக்குவரத்து , வர்த்த அமைப்புகள் என அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து நிற்பதால் இது பூரணமாக அனுஷ்டிக்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்

கொடுங்கோல் ஆட்சியின் வலி வேதனைகளை உணர்ந்தவர்களாக போராட்டத்திற்கு கரம் கொடுப்பீர்.samugammedia நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு நாட்டு மக்களுடன் அனைத்து அமைப்புகளையும் பூரண ஒத்துழைப்பினை தந்துதவுமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்றைய  தினம் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்தும் அவர்கள் குறிப்பிடுகையில், கடந்த காலத்தில் கொடுங்கோல் அரசாங்கத்தின் பயங்கரவாத சட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் மக்களிற்காக பயங்கரவாத தடை சட்டத்தினை எதிர்த்து வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நாளைய தினம் ( 25) முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு  அனைவரும் ஆதரவினை தருமாறு வேண்டி நிற்கின்றோம். இந்த பயங்கரவாத தடை சட்டத்தின் மூலம் வடக்கு கிழக்கு பகுதி வாழ்  மக்கள் மாத்திரமன்றி முஸ்லீம்  மக்களுடன் பெரும்பான்மை இனத்தவரான சிங்களவரும் பாதிக்கப்பட்டுள்ளமை என்பதே வரலாறாகும். கொடுங்கோல் ஆட்சியின் கீழ் குறிப்பாக  வடக்கு ,கிழக்க்கில் பயங்கரவாத  அந்த  வலி வேதனைகளை உணர்ந்தவர்களாக அரசியல் காட்சிகள், வர்த்தக சங்கங்கள் மற்றும் அமைப்புகள் என ஒன்றிணைந்து மேற்கொள்ளவுள்ள போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து அமைப்புகளும் இந்த ஹர்த்தாலை முழுவதுமாக கடைபிடிக்கும் என நம்புகின்றோம். அத்துடன்,  தனியார் நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் , தனியார் மற்றும் அரச போக்குவரத்து , வர்த்த அமைப்புகள் என அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து நிற்பதால் இது பூரணமாக அனுஷ்டிக்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement