• Nov 25 2024

மரணத்தில் மகிழ்வோர் மனச்சாட்சி அற்றவர்கள்..! பிரபாகரன் கொல்லப்பட்டபோது நடந்தது என்ன..? மொட்டு எம்.பி. காட்டம்

Chithra / Jan 30th 2024, 4:01 pm
image

 

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாழ்க்கை கதையில் வெளிப்புறத்தை மாத்திரம் மேலோட்டமாக பார்த்துவிட்டு, அவரின் மரணத்தில் மகிழ்ச்சியை அனுபவிப்பவர்கள் முற்றிலும் மனச்சாட்சியற்ற, இரக்கம் இல்லாதவர்களாவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார்.

நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நேற்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடிக்கு அப்பாலான மனிதாபிமான நெருக்கடி எமது நாட்டில் உருவாகியுள்ளது. மற்றவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது மகிழ்ச்சியில் குதூகளித்து, பட்டாசு வெடித்து, இனிப்பு பண்டங்கள் தயாரித்து, பாற்சோறு சமைத்து கொண்டாடும் வகையில் இந்த அரசியல் கலாசாரம் மாறியுள்ளது.

சனத் நிஷாந்த எம்.பியின் அகால மரணத்தை அநேகமானவர்கள் கொண்டாடினார்கள். ஆனால், புத்தளம் மாவட்ட மக்களினதும் நாட்டிலுள்ள இலட்சக்கணக்கான உணர்வுபூர்வமான மக்களின் பங்கேற்புடனும்  அவர் இறுதிப் பயணம் சென்றார்.

மே தினக் கூட்டத்தில் ரணசிங்க பிரேமதாச மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, அவரால் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட உதா கமவிலிருந்த சிலர் கூட, இனிப்பு பண்டங்கள் தயாரித்து உண்டு மகிழ்ந்தார்கள். இதுவே, இந்த முட்டாள்தனமான செயற்பாடு தொடர்பில் எனக்கு கிடைத்த முதல் அனுபவமாகும்.

பிரபாகரன் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்திலும் கூட வீதிக்கு வீதி பாற்சோறு சமைத்து கொண்டாடினார்கள். 

மற்றையவரின் மரணத்தில் மகிழும் மனநிலை கொண்ட மக்களே இந்த நாட்டில் இருக்கிறார்கள். அதுவே 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதியும் இடம்பெற்றது.

அவரின் குடும்பம் வர்த்தகப் பின்னணியை கொண்டதாகும். அதேபோன்றும், அரசியலுக்காக அவரின் குடும்பம் உயிர்த்தியாகமும் செய்துள்ளது. 

அவரின் வீட்டுக்கு தீ வைத்தவர்களை அறிந்தும் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்று புன்னகை முகத்துடன் தெரிவித்தவர். 

அவர் உழைத்த பணத்தில் அவரால் முடிந்த உதவிகளையும் மக்களுக்கு சேவைகளையும் வழங்கியுள்ளார். இதுவே அவரின் வாழ்க்கை கதையின் உட்பக்கம்.

சனத் நிஷாந்தவுக்கு சட்டத்தில் தண்டனை வழங்கப்படாததால், அவரின் கர்ம வினை தண்டனை கொடுத்துவிட்டதாக சமூக வலைத் தளங்களில் பதிவுகளை பகிர்கிறார்கள். அவரின் மரணத்தில் அரக்கர்கள் சிலர் மகிழ்ச்சியை தேடுகிறார்கள். என்றார்.

1990ஆம் ஆண்டு பொரளை பொது மயானத்தில் வைத்து ரோஹண விஜயவீர உயிருடன் கொளுத்தி படுகொலை செய்யப்பட்டபோது அவரின் கர்ம வினையை தீர்த்தது யார்? 

விஜய குமாரதுங்கவை கொலை செய்வதற்கு கர்ம வினை தீர்த்தது யார்? 

அப்பாவி ஊடகவியலாளர் பிரேமகீர்த்தி அல்விஸ் எந்த கர்ம வினையினால் கொலை செய்யப்பட்டார்? 

அதேபோன்று, எந்த கர்ம வினையினால் பெரும் எண்ணிக்கையிலா சிவில் அமைப்பு தலைவர்கள் கொலைசெய்யப்பட்டார்கள் என்பதை விளங்கப்படுத்தப்பட வேண்டும். 

இந்த அக்கிரமங்களை செய்தவர்களின் கர்மவினை என்று தீர்க்கப்படும் என்பதற்கான பதிலே தற்போது அவசியமாகும்.

திசைக்காட்டிச் சின்னமே இந்த நாட்டை கட்டியெழுப்பும் என்ற நிலைப்பாடு சமூகத்தில் பரவலாக காணப்படுகின்றது. 

பேரழிவில் மகிழ்ச்சியை அனுபவிக்கும் திசைக்காட்டியை நோக்கி கையுயர்த்தும் சகலரும் மனச்சாட்சி இல்லாத, இரக்கம் இல்லாத, கருணை இல்லாத மக்களை கட்டியெழுப்புவர்களுக்கு இந்த நாட்டில் இருக்கும் அதிகாரம் என்னவென்பது புரியவில்லை. இதில் அநேகமாக சிங்கள பெளத்தர்களும் சிங்கள கிறிஸ்தவர்களுமே இருக்கிறார்கள் என்றார்.

மரணத்தில் மகிழ்வோர் மனச்சாட்சி அற்றவர்கள். பிரபாகரன் கொல்லப்பட்டபோது நடந்தது என்ன. மொட்டு எம்.பி. காட்டம்  மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாழ்க்கை கதையில் வெளிப்புறத்தை மாத்திரம் மேலோட்டமாக பார்த்துவிட்டு, அவரின் மரணத்தில் மகிழ்ச்சியை அனுபவிப்பவர்கள் முற்றிலும் மனச்சாட்சியற்ற, இரக்கம் இல்லாதவர்களாவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார்.நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நேற்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.பொருளாதார நெருக்கடிக்கு அப்பாலான மனிதாபிமான நெருக்கடி எமது நாட்டில் உருவாகியுள்ளது. மற்றவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது மகிழ்ச்சியில் குதூகளித்து, பட்டாசு வெடித்து, இனிப்பு பண்டங்கள் தயாரித்து, பாற்சோறு சமைத்து கொண்டாடும் வகையில் இந்த அரசியல் கலாசாரம் மாறியுள்ளது.சனத் நிஷாந்த எம்.பியின் அகால மரணத்தை அநேகமானவர்கள் கொண்டாடினார்கள். ஆனால், புத்தளம் மாவட்ட மக்களினதும் நாட்டிலுள்ள இலட்சக்கணக்கான உணர்வுபூர்வமான மக்களின் பங்கேற்புடனும்  அவர் இறுதிப் பயணம் சென்றார்.மே தினக் கூட்டத்தில் ரணசிங்க பிரேமதாச மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, அவரால் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட உதா கமவிலிருந்த சிலர் கூட, இனிப்பு பண்டங்கள் தயாரித்து உண்டு மகிழ்ந்தார்கள். இதுவே, இந்த முட்டாள்தனமான செயற்பாடு தொடர்பில் எனக்கு கிடைத்த முதல் அனுபவமாகும்.பிரபாகரன் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்திலும் கூட வீதிக்கு வீதி பாற்சோறு சமைத்து கொண்டாடினார்கள். மற்றையவரின் மரணத்தில் மகிழும் மனநிலை கொண்ட மக்களே இந்த நாட்டில் இருக்கிறார்கள். அதுவே 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதியும் இடம்பெற்றது.அவரின் குடும்பம் வர்த்தகப் பின்னணியை கொண்டதாகும். அதேபோன்றும், அரசியலுக்காக அவரின் குடும்பம் உயிர்த்தியாகமும் செய்துள்ளது. அவரின் வீட்டுக்கு தீ வைத்தவர்களை அறிந்தும் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்று புன்னகை முகத்துடன் தெரிவித்தவர். அவர் உழைத்த பணத்தில் அவரால் முடிந்த உதவிகளையும் மக்களுக்கு சேவைகளையும் வழங்கியுள்ளார். இதுவே அவரின் வாழ்க்கை கதையின் உட்பக்கம்.சனத் நிஷாந்தவுக்கு சட்டத்தில் தண்டனை வழங்கப்படாததால், அவரின் கர்ம வினை தண்டனை கொடுத்துவிட்டதாக சமூக வலைத் தளங்களில் பதிவுகளை பகிர்கிறார்கள். அவரின் மரணத்தில் அரக்கர்கள் சிலர் மகிழ்ச்சியை தேடுகிறார்கள். என்றார்.1990ஆம் ஆண்டு பொரளை பொது மயானத்தில் வைத்து ரோஹண விஜயவீர உயிருடன் கொளுத்தி படுகொலை செய்யப்பட்டபோது அவரின் கர்ம வினையை தீர்த்தது யார் விஜய குமாரதுங்கவை கொலை செய்வதற்கு கர்ம வினை தீர்த்தது யார் அப்பாவி ஊடகவியலாளர் பிரேமகீர்த்தி அல்விஸ் எந்த கர்ம வினையினால் கொலை செய்யப்பட்டார் அதேபோன்று, எந்த கர்ம வினையினால் பெரும் எண்ணிக்கையிலா சிவில் அமைப்பு தலைவர்கள் கொலைசெய்யப்பட்டார்கள் என்பதை விளங்கப்படுத்தப்பட வேண்டும். இந்த அக்கிரமங்களை செய்தவர்களின் கர்மவினை என்று தீர்க்கப்படும் என்பதற்கான பதிலே தற்போது அவசியமாகும்.திசைக்காட்டிச் சின்னமே இந்த நாட்டை கட்டியெழுப்பும் என்ற நிலைப்பாடு சமூகத்தில் பரவலாக காணப்படுகின்றது. பேரழிவில் மகிழ்ச்சியை அனுபவிக்கும் திசைக்காட்டியை நோக்கி கையுயர்த்தும் சகலரும் மனச்சாட்சி இல்லாத, இரக்கம் இல்லாத, கருணை இல்லாத மக்களை கட்டியெழுப்புவர்களுக்கு இந்த நாட்டில் இருக்கும் அதிகாரம் என்னவென்பது புரியவில்லை. இதில் அநேகமாக சிங்கள பெளத்தர்களும் சிங்கள கிறிஸ்தவர்களுமே இருக்கிறார்கள் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement