• Jun 28 2024

மீனவரை தீ மூட்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் இல்லையேல் போராட்டம்- மீனவ சங்கங்கள் எச்சரிக்கை!

Tamil nila / Jun 22nd 2024, 6:35 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் பருத்தித் துறை வத்திராயன் பகுதியில் வாடியில் படுத்துறங்கிய மீனவ சமாசத்தின் பிரதிநிதி மீது தீ மூட்டியவர்கள் சட்டத்தின் முன்னிறுத்தப்பட வேண்டும் என யாழ் மாவட்ட கடை தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் சமாசங்களின் சம்மேளனப் பிரதிநிதி அன்ரன் செபராசா தெரிவித்தார்.

நேற்றைய தினம் சனிக்கிழமை ஜால் மாவட்ட கடள் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் எமது சங்க பிரதிநிதி தனது வாடியில் படுத்து உறங்கிய போது இனம் தெரியாத நபர்கள் அவர் மீது பெட்ரோல் குண்டு வீசிய நிலையில் அவரின் உடற்பகுதியின் அனேகமான பகுதிகள் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளது. 

அவர் வடமராட்சி கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத சுருக்கு வலைக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து வருபவர். 

இதன் காரணமாக அவருக்கு சட்ட விரோத சுருக்கு வலைத் தொழிலாளர்களினால் பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்துள்ளதாக அறியக் கிடைக்கும் நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

ஆகவே குறித்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை பொலிசார் விரைவாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

அவ்வாறு நிறுத்தப்படாவிட்டால் எமது மீனவருக்கு இழைக்கப்பட்ட அநீதி நீதி வேண்டி மீனவர்கள் ஜனநாயக வழியில் போராட்டம் நடத்துவதற்கு தள்ளப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

மீனவரை தீ மூட்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் இல்லையேல் போராட்டம்- மீனவ சங்கங்கள் எச்சரிக்கை யாழ்ப்பாணம் பருத்தித் துறை வத்திராயன் பகுதியில் வாடியில் படுத்துறங்கிய மீனவ சமாசத்தின் பிரதிநிதி மீது தீ மூட்டியவர்கள் சட்டத்தின் முன்னிறுத்தப்பட வேண்டும் என யாழ் மாவட்ட கடை தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் சமாசங்களின் சம்மேளனப் பிரதிநிதி அன்ரன் செபராசா தெரிவித்தார்.நேற்றைய தினம் சனிக்கிழமை ஜால் மாவட்ட கடள் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் எமது சங்க பிரதிநிதி தனது வாடியில் படுத்து உறங்கிய போது இனம் தெரியாத நபர்கள் அவர் மீது பெட்ரோல் குண்டு வீசிய நிலையில் அவரின் உடற்பகுதியின் அனேகமான பகுதிகள் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளது. அவர் வடமராட்சி கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத சுருக்கு வலைக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து வருபவர். இதன் காரணமாக அவருக்கு சட்ட விரோத சுருக்கு வலைத் தொழிலாளர்களினால் பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்துள்ளதாக அறியக் கிடைக்கும் நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆகவே குறித்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை பொலிசார் விரைவாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.அவ்வாறு நிறுத்தப்படாவிட்டால் எமது மீனவருக்கு இழைக்கப்பட்ட அநீதி நீதி வேண்டி மீனவர்கள் ஜனநாயக வழியில் போராட்டம் நடத்துவதற்கு தள்ளப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement