• Feb 09 2025

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியவர்கள் விரக்தி நிலையில்- திலித் ஜயவீர சுட்டிக்காட்டு..!

Sharmi / Feb 8th 2025, 11:31 pm
image

தேசிய மக்கள் சக்தியினருக்கு  வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர் தற்போது அரசாங்கத்தின் மீது விரக்தியடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று (07) பிற்பகல் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, அந்தக் குழுக்களை தமது கட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதன்போது பொலன்னறுவை மாவட்டத்தின் 07 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்ட புதிய அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களையும் கட்சித் தலைவர் திலித் ஜயவீர வழங்கினார்.

 இதன்போது திலித் ஜயவீர உரையாற்றுகையில்,

'தற்போதைய அரசாங்கம் எப்போதும் வெற்றி பெறும் என்று ஒரு கணம் கூட நினைக்காதீர்கள். திசைகாட்டிக்கு வாக்களித்தவர்ககளுக்கு அதுதான் சவால்.'

அந்த சவாலை சமாளிக்க திசைக்காட்டிக்கு வாக்களித்தவர்களுக்கு சரியான விடயங்களை விளக்கினால், அவர்கள் எங்களுடன் நிற்பார்கள்.

ஏன் என்றால் எங்களுடன் இருந்தவர்கள் தான் அவர்கள் அனைவரும்.

இதை நான் மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன். இந்த முறை திசைகாட்டிக்கு உதவிய எனது நண்பர்கள் பலர் இன்று திசைகாட்டியில் இல்லை.

'எனவே நமது அதிகபட்ச ஆற்றலுடன் இதை வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.


தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியவர்கள் விரக்தி நிலையில்- திலித் ஜயவீர சுட்டிக்காட்டு. தேசிய மக்கள் சக்தியினருக்கு  வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர் தற்போது அரசாங்கத்தின் மீது விரக்தியடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.பொலன்னறுவையில் நேற்று (07) பிற்பகல் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, அந்தக் குழுக்களை தமது கட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.இதன்போது பொலன்னறுவை மாவட்டத்தின் 07 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்ட புதிய அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களையும் கட்சித் தலைவர் திலித் ஜயவீர வழங்கினார். இதன்போது திலித் ஜயவீர உரையாற்றுகையில்,'தற்போதைய அரசாங்கம் எப்போதும் வெற்றி பெறும் என்று ஒரு கணம் கூட நினைக்காதீர்கள். திசைகாட்டிக்கு வாக்களித்தவர்ககளுக்கு அதுதான் சவால்.'அந்த சவாலை சமாளிக்க திசைக்காட்டிக்கு வாக்களித்தவர்களுக்கு சரியான விடயங்களை விளக்கினால், அவர்கள் எங்களுடன் நிற்பார்கள்.ஏன் என்றால் எங்களுடன் இருந்தவர்கள் தான் அவர்கள் அனைவரும்.இதை நான் மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன். இந்த முறை திசைகாட்டிக்கு உதவிய எனது நண்பர்கள் பலர் இன்று திசைகாட்டியில் இல்லை.'எனவே நமது அதிகபட்ச ஆற்றலுடன் இதை வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement