• May 20 2024

அந்நிய செலாவணி கையிருப்பிற்கு அச்சுறுத்தல் - பொருட்களின் விலைகளில் விரைவில் திருத்தங்கள்..! samugammedia

Chithra / May 29th 2023, 10:53 am
image

Advertisement


இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையை தொடர்ந்து அதற்கு இணையாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் உரிய வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதனை ஆராய்ந்து பாரக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவிசாவளை தெஹியோவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.


டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவும் அந்நிய செலாவணியை சீராக பேணுவதற்காகவும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

விவசாயம், கடற்றொழில் மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட பல்வேறு துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தற்போது சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.


பொருளாதாரம் முன்னேற்றப்பாதையை நோக்கி நகர்வதால் அந்நிய செலாவணி கையிருப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மேலும் சில இறக்குமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அவதானம் செலுத்தப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சிம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


அந்நிய செலாவணி கையிருப்பிற்கு அச்சுறுத்தல் - பொருட்களின் விலைகளில் விரைவில் திருத்தங்கள். samugammedia இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையை தொடர்ந்து அதற்கு இணையாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் உரிய வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதனை ஆராய்ந்து பாரக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அவிசாவளை தெஹியோவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவும் அந்நிய செலாவணியை சீராக பேணுவதற்காகவும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.விவசாயம், கடற்றொழில் மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட பல்வேறு துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தற்போது சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.பொருளாதாரம் முன்னேற்றப்பாதையை நோக்கி நகர்வதால் அந்நிய செலாவணி கையிருப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மேலும் சில இறக்குமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அவதானம் செலுத்தப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சிம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement