• May 02 2024

முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல்...! உடனடி விசாரணை வேண்டும்...! சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்து...!samugammedia

Sharmi / Sep 30th 2023, 10:45 am
image

Advertisement

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் உடனடியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவை கோருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டதால் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதாக பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். உண்மையில், அவருக்கு உயிரச்சுறுத்தல் காணப்பட்டதா, அவ்வாறு காணப்பட்டால் அது யாரால் விடுக்கப்பட்டது, அதனுடன் தொடர்புடைய தரப்புக்கள் யாவை என்பன தொடர்பில் விரிவான விசாரணையை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

நீதித்துறையின் சுயாதீனத்தினையும், நன்மதிப்பையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தச்செயற்பாடு மிகவும் அவசியமாக உள்ளது.

ஆகவே குற்றப்புலனாய்வுப் பிரிவு இந்த விடயத்தில் தாமதமின்றி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் எழுத்து மூலமான கோரிக்கையையும் அனுப்பிவைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல். உடனடி விசாரணை வேண்டும். சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்து.samugammedia முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் உடனடியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவை கோருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டதால் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதாக பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். உண்மையில், அவருக்கு உயிரச்சுறுத்தல் காணப்பட்டதா, அவ்வாறு காணப்பட்டால் அது யாரால் விடுக்கப்பட்டது, அதனுடன் தொடர்புடைய தரப்புக்கள் யாவை என்பன தொடர்பில் விரிவான விசாரணையை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.நீதித்துறையின் சுயாதீனத்தினையும், நன்மதிப்பையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தச்செயற்பாடு மிகவும் அவசியமாக உள்ளது. ஆகவே குற்றப்புலனாய்வுப் பிரிவு இந்த விடயத்தில் தாமதமின்றி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் எழுத்து மூலமான கோரிக்கையையும் அனுப்பிவைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement