• Feb 23 2025

யாழில் புகையிரதம் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது!

Thansita / Feb 23rd 2025, 9:14 am
image

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில், புகையிரதம் மீது தெடர்ச்சியாக கல் வீச்சு தாக்குதலை நடத்தி வந்தவர்கள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

யாழ். மாவட்ட பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜயசிங்க கட்டளைக்கிணங்க, மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கு அமைய மூன்று பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்தேவி நேற்றுமுன்தினம் யாழ் நேக்கி வரும்பொழுது குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. புகையிரதம் வரும்போது அரியாலை பகுதியில் வைத்து கல் எறிவதை புகையிரத்தில் வரும் ஒருவர் தற்செயலாக படம் பிடிக்கும்போது அந்த தாக்குதல் விடியோவில் பதிவாகியது.

ஏற்கனவே நடாத்திய கல்வீச்சு தாக்குதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து யாழ்ப்பாண புகையிரத நிலையமும் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த விடயம் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

15-13 வயதுகளுக்குட்பட்ட சிறுவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள் பாடசாலைக்கும் ஒழுங்கீனமானவர்கள், ஏற்கனவே சிறு சிறு குற்றங்ளை புரிந்தவர்கள் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை பெற்றோர்களின் உதவியுடன் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

யாழில் புகையிரதம் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில், புகையிரதம் மீது தெடர்ச்சியாக கல் வீச்சு தாக்குதலை நடத்தி வந்தவர்கள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.யாழ். மாவட்ட பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜயசிங்க கட்டளைக்கிணங்க, மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கு அமைய மூன்று பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்தேவி நேற்றுமுன்தினம் யாழ் நேக்கி வரும்பொழுது குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. புகையிரதம் வரும்போது அரியாலை பகுதியில் வைத்து கல் எறிவதை புகையிரத்தில் வரும் ஒருவர் தற்செயலாக படம் பிடிக்கும்போது அந்த தாக்குதல் விடியோவில் பதிவாகியது.ஏற்கனவே நடாத்திய கல்வீச்சு தாக்குதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து யாழ்ப்பாண புகையிரத நிலையமும் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த விடயம் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.15-13 வயதுகளுக்குட்பட்ட சிறுவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பாடசாலைக்கும் ஒழுங்கீனமானவர்கள், ஏற்கனவே சிறு சிறு குற்றங்ளை புரிந்தவர்கள் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை பெற்றோர்களின் உதவியுடன் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement