• Nov 26 2024

துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி பல பொருட்களை கொள்ளையடித்த மூவர் கைது!

Chithra / Jun 17th 2024, 3:04 pm
image

  துப்பாக்கிகளை பயன்படுத்தி பல பொருட்களை கொள்ளையடித்த மூவர் கைது செய்யப்பட்டதாக படல்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நில் பனாகொட, திவுலபிட்டிய பின்னகலேவத்த மற்றும் தெவமொட்டாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள், எட்டு தோட்டாக்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு, திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள், 6 கத்திகள், வீடுகளை உடைக்கும் கருவிகள் மற்றும் தங்க ஆபரணங்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மூன்று வாரங்களுக்கு முன்னர் களுமடை பிரதேசத்தில் உள்ள வைத்திய நிலையம் ஒன்றில் வைத்தியர் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் . 

சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணிப்பதாக தெல்வகுர பிரதேச பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்  அடிப்படையில், பொலிஸார் இருவரையும் கைது செய்ய முற்பட்ட போது இவர்கள் தப்பிசென்றுள்ளனர் . 

தப்பிசென்ற இருவரையும் பொலிஸார் பின் தொடர்ந்து சென்று கைது செய்து சோதனையிட்ட போது சந்தேகநபர் ஒருவரிடமிருந்து கைக்குண்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதன்போது, மற்றைய நபரிடம் இருந்து நான்கு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதையடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்திய போது இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் மினுவாங்கொட கட்டு அலேகம பிரதேசத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. 

இதேவேளை, மொட்டாவ பிரதேசத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை ஒருவர்  விற்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மூன்றாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன்,  அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள், துப்பாக்கி, நான்கு தோட்டாக்கள் மற்றும் 6 கத்திகள் அடங்கிய பையொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைதான சந்தேகநபர்கள் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு போலி இலக்கத் தகடுகளை பயன்படுத்தி பயணித்துள்ளார்.

இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் படல்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரண்டு திருட்டுச் சம்பவங்களும், கட்டான மற்றும் மினுவாங்கொடை  பகுதிகளில் ஒவ்வொரு திருட்டுசம்பவங்களும் பதிவாகியுள்ளன.

துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி பல பொருட்களை கொள்ளையடித்த மூவர் கைது   துப்பாக்கிகளை பயன்படுத்தி பல பொருட்களை கொள்ளையடித்த மூவர் கைது செய்யப்பட்டதாக படல்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நில் பனாகொட, திவுலபிட்டிய பின்னகலேவத்த மற்றும் தெவமொட்டாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள், எட்டு தோட்டாக்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு, திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள், 6 கத்திகள், வீடுகளை உடைக்கும் கருவிகள் மற்றும் தங்க ஆபரணங்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.மூன்று வாரங்களுக்கு முன்னர் களுமடை பிரதேசத்தில் உள்ள வைத்திய நிலையம் ஒன்றில் வைத்தியர் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் . சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணிப்பதாக தெல்வகுர பிரதேச பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்  அடிப்படையில், பொலிஸார் இருவரையும் கைது செய்ய முற்பட்ட போது இவர்கள் தப்பிசென்றுள்ளனர் . தப்பிசென்ற இருவரையும் பொலிஸார் பின் தொடர்ந்து சென்று கைது செய்து சோதனையிட்ட போது சந்தேகநபர் ஒருவரிடமிருந்து கைக்குண்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, மற்றைய நபரிடம் இருந்து நான்கு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதையடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்திய போது இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் மினுவாங்கொட கட்டு அலேகம பிரதேசத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இதேவேளை, மொட்டாவ பிரதேசத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை ஒருவர்  விற்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மூன்றாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன்,  அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள், துப்பாக்கி, நான்கு தோட்டாக்கள் மற்றும் 6 கத்திகள் அடங்கிய பையொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான சந்தேகநபர்கள் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு போலி இலக்கத் தகடுகளை பயன்படுத்தி பயணித்துள்ளார்.இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் படல்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரண்டு திருட்டுச் சம்பவங்களும், கட்டான மற்றும் மினுவாங்கொடை  பகுதிகளில் ஒவ்வொரு திருட்டுசம்பவங்களும் பதிவாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement