நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும் என்றும் வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சமயங்களில் திடீரென பலத்த காற்று வீசுதல் மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் இடியுடன் மழை நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் என கூறப்பட்டுள்ளது.இதற்கிடையில், நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும் என்றும் வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் சமயங்களில் திடீரென பலத்த காற்று வீசுதல் மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.