• Dec 25 2024

ஈ.பி.டி.பியின் அரசியல் செயற்பாடுகளை வலுப்படுத்த : வன்னி தேர்தல் மாவட்டத்தில் புதிய கட்டமைப்பு

Tharmini / Dec 22nd 2024, 4:29 pm
image

வன்னி தேர்தல் மாவட்ட த்தில் ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சியின் ( ஈ.பி.டி.பி) செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் புதிய கட்டமைப்பு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள், செயற்பாட்டாளர்களுடன் இன்று (22) கலந்துரையாடலொன்றை செயலாளர் நாயகம் முன்னெடுத்திருந்தார்.

குறிப்பாக வன்னி தேர்தல் மாவடத்தின் அரசியல் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (22)  வவுனியா சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற தேர்தலின் பின்னடைவுகள் குறித்த அக, புற காரணிகளை ஆராய்ந்து, கட்சியை  வலுப்படுத்தும் வகையில் கட்டமைப்புக்களை மறுசீரமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனடிப்படையில்  முல்லைத்தீவு,மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவடத்தின் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை செழுமைப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும் வகையில் முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களின் அமைப்பாளராக ஜெயராஜ் (தோழர் கிருபன்) அவர்களை கொண்ட மாவட்டக் கட்டமைப்பும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவால்  நியமிக்கப்பட்டது.

மேலும், கட்சியின் தேசிய மாநாட்டை விரைவில் நடத்துவதற்கு தயாராகுமாறும் கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குதிப்பிடத்தக்கது.





ஈ.பி.டி.பியின் அரசியல் செயற்பாடுகளை வலுப்படுத்த : வன்னி தேர்தல் மாவட்டத்தில் புதிய கட்டமைப்பு வன்னி தேர்தல் மாவட்ட த்தில் ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சியின் ( ஈ.பி.டி.பி) செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் புதிய கட்டமைப்பு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் கட்டமைக்கப்பட்டுள்ளது.ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள், செயற்பாட்டாளர்களுடன் இன்று (22) கலந்துரையாடலொன்றை செயலாளர் நாயகம் முன்னெடுத்திருந்தார்.குறிப்பாக வன்னி தேர்தல் மாவடத்தின் அரசியல் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (22)  வவுனியா சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற தேர்தலின் பின்னடைவுகள் குறித்த அக, புற காரணிகளை ஆராய்ந்து, கட்சியை  வலுப்படுத்தும் வகையில் கட்டமைப்புக்களை மறுசீரமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.இதனடிப்படையில்  முல்லைத்தீவு,மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவடத்தின் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை செழுமைப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும் வகையில் முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களின் அமைப்பாளராக ஜெயராஜ் (தோழர் கிருபன்) அவர்களை கொண்ட மாவட்டக் கட்டமைப்பும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவால்  நியமிக்கப்பட்டது.மேலும், கட்சியின் தேசிய மாநாட்டை விரைவில் நடத்துவதற்கு தயாராகுமாறும் கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குதிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement