யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் குறைக்கும் வகையில், இன்று மாவட்டத்திலுள்ள அனைத்து 'சிபெட்கோ' (Ceypetco) எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் தடையின்றி பெற்றோல் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு. டி. எஸ். ராஜகருணாவுடன் நேற்று மேற்கொண்ட அவசரத் தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எரிபொருள் நிலையங்களில் காணப்படும் நீண்ட வரிசைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கொலன்னாவையிலிருந்து நேரடியாக விற்பனை நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதற்கான விநியோகப் பட்டியலை வட பிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபன முகாமையாளர் திரு. சிவகரன் தயாரித்துள்ளார். விநியோக நடவடிக்கைகளை முறைப்படி ஒழுங்குபடுத்துமாறு அரசாங்க அதிபர் அவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த விசேட ஏற்பாடுகள் குறித்து கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரின் கவனத்திற்கும் அரசாங்க அதிபரால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் நாளை முதல் யாழ்ப்பாணத்தில் பெற்றோல் தட்டுப்பாடு நீங்கி, இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் இன்று அதிரடி - 36 எரிபொருள் நிலையங்களுக்கும் பெற்றோல் விநியோகம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் குறைக்கும் வகையில், இன்று மாவட்டத்திலுள்ள அனைத்து 'சிபெட்கோ' (Ceypetco) எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் தடையின்றி பெற்றோல் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு. டி. எஸ். ராஜகருணாவுடன் நேற்று மேற்கொண்ட அவசரத் தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.எரிபொருள் நிலையங்களில் காணப்படும் நீண்ட வரிசைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கொலன்னாவையிலிருந்து நேரடியாக விற்பனை நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.இதற்கான விநியோகப் பட்டியலை வட பிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபன முகாமையாளர் திரு. சிவகரன் தயாரித்துள்ளார். விநியோக நடவடிக்கைகளை முறைப்படி ஒழுங்குபடுத்துமாறு அரசாங்க அதிபர் அவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.இந்த விசேட ஏற்பாடுகள் குறித்து கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரின் கவனத்திற்கும் அரசாங்க அதிபரால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் நாளை முதல் யாழ்ப்பாணத்தில் பெற்றோல் தட்டுப்பாடு நீங்கி, இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.