• Nov 28 2024

இன்று பெரிய வெள்ளி; பலத்த பாதுகாப்பில் தேவாலயங்கள்..!

Chithra / Mar 29th 2024, 10:43 am
image

 

மூதூர் அந்தோனியர் தேவாலயத்தின் பெரிய வெள்ளி சிலுவைப் பாதை இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

சிலுவைப்பாதையானது தேவாலயத்திலிருந்து ஆரம்பமாகி மூதூர் பிரதான வீதியூடாகச் சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.

அந்தோனியர் தேவாலயத்தின் அருட்தந்தை அலெக்ஸ் தலைமையில் இடம்பெற்ற சிலுவைப் பாதையில் அதிகளவான கிறிஸ்தவ மக்கள் பங்கு கொண்டிருந்தனர்.

இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

கிறிஸ்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.

இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இந்த நிகழ்வின் போது கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இதற்கமைய, இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், விசேட ஆராதனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை நாட்டில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இன்று பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

நாளை மறுதினமும் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


இன்று பெரிய வெள்ளி; பலத்த பாதுகாப்பில் தேவாலயங்கள்.  மூதூர் அந்தோனியர் தேவாலயத்தின் பெரிய வெள்ளி சிலுவைப் பாதை இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.சிலுவைப்பாதையானது தேவாலயத்திலிருந்து ஆரம்பமாகி மூதூர் பிரதான வீதியூடாகச் சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.அந்தோனியர் தேவாலயத்தின் அருட்தந்தை அலெக்ஸ் தலைமையில் இடம்பெற்ற சிலுவைப் பாதையில் அதிகளவான கிறிஸ்தவ மக்கள் பங்கு கொண்டிருந்தனர்.இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.கிறிஸ்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இந்த நிகழ்வின் போது கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.இதற்கமைய, இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், விசேட ஆராதனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இதேவேளை நாட்டில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இன்று பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை மறுதினமும் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement