• Jul 22 2025

இன்று பலத்த காற்றுடன் மழை; 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பும் கடல் அலைகள்

Chithra / Jul 22nd 2025, 7:50 am
image


நாட்டின் சில இடங்களில் இன்று சுமார் 75 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என  வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும். 

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும். 

வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வட-மத்திய, வடமேல், மத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சுமார் 55-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு  40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இக் கடற்பரப்புகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


இன்று பலத்த காற்றுடன் மழை; 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பும் கடல் அலைகள் நாட்டின் சில இடங்களில் இன்று சுமார் 75 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என  வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும். வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வட-மத்திய, வடமேல், மத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சுமார் 55-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு  40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இக் கடற்பரப்புகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement