உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதற்கமைய இலங்கையின் இன்றைய (27) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய
தங்க நிலவரத்தின்படி,
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,920 ரூபாவாக
பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 183,350 ரூபாவாக
பதிவாகியுள்ளது.
அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,010.00 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.