• May 13 2024

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்மட்ட அதிகாரிகள் வடக்கிற்கு விஜயம்! SamugamMedia

Tamil nila / Feb 16th 2023, 7:48 pm
image

Advertisement

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளரும் ஓய்வு பெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தலைமையிலான ஆணைக்குழுவின் உயர்மட்ட குழுவினர் இன்றையதினம் யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்தனர். குறிப்பாக ஆணையாளர், செயலாளர், விசாரணைப் பணிப்பாளர், சட்ட அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இன்றையதினம் இவ்வாறு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.  இதன்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் அவர்களும் உடனிருந்தார்.


அவர்கள் முதலாவதாக சமயத் தலைவர்களுடன் கலந்தாலோசனை செய்திருந்தனர்.


குறிப்பாக, யாழ். மாவட்டத்தில் பெரிதாக பேசப்படுகின்ற போதை தொடர்பாக, புனர்வாழ்வு அளித்தல் தொடர்பாக தன்னார்வ ரீதியில் சமய நிறுவனங்கள் எவ்வாறு அந்த புனர்வாழ்வு பொறிமுறைகளை உருவாக்க முடியும், அதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு எவ்வாறான உதவிகளை செய்ய முடியும் என கலந்தாலோசனை செய்திருந்தனர்.


அதன் பின்னர் வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற சகல பொலிஸ் மா அதிபர்களையும் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டது. அதன் பிரகாரம் யாழ்ப்பாணத்தில், குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாகவும், பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கின்ற முறைப்பாடுகள் தொடர்பாகவும் பல்வேறுபட்ட விடயங்கள் இன்றையதினம் கலந்துரையாடப்பட்டன.


நாளைய தினம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படுமாக இருந்தால் அது எவ்வாறான முறையில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்ற முறைகளை ஆணைக்குழு வழங்குவதற்கு ஏதுவாக, பாதிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளோடு அரசு மற்றும் அரசியல் பிரமுகர்களோடு கலந்தாலோசனை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்மட்ட அதிகாரிகள் வடக்கிற்கு விஜயம் SamugamMedia இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளரும் ஓய்வு பெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தலைமையிலான ஆணைக்குழுவின் உயர்மட்ட குழுவினர் இன்றையதினம் யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்தனர். குறிப்பாக ஆணையாளர், செயலாளர், விசாரணைப் பணிப்பாளர், சட்ட அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இன்றையதினம் இவ்வாறு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.  இதன்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் அவர்களும் உடனிருந்தார்.அவர்கள் முதலாவதாக சமயத் தலைவர்களுடன் கலந்தாலோசனை செய்திருந்தனர்.குறிப்பாக, யாழ். மாவட்டத்தில் பெரிதாக பேசப்படுகின்ற போதை தொடர்பாக, புனர்வாழ்வு அளித்தல் தொடர்பாக தன்னார்வ ரீதியில் சமய நிறுவனங்கள் எவ்வாறு அந்த புனர்வாழ்வு பொறிமுறைகளை உருவாக்க முடியும், அதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு எவ்வாறான உதவிகளை செய்ய முடியும் என கலந்தாலோசனை செய்திருந்தனர்.அதன் பின்னர் வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற சகல பொலிஸ் மா அதிபர்களையும் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டது. அதன் பிரகாரம் யாழ்ப்பாணத்தில், குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாகவும், பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கின்ற முறைப்பாடுகள் தொடர்பாகவும் பல்வேறுபட்ட விடயங்கள் இன்றையதினம் கலந்துரையாடப்பட்டன.நாளைய தினம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படுமாக இருந்தால் அது எவ்வாறான முறையில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்ற முறைகளை ஆணைக்குழு வழங்குவதற்கு ஏதுவாக, பாதிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளோடு அரசு மற்றும் அரசியல் பிரமுகர்களோடு கலந்தாலோசனை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement