• Nov 24 2024

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்...!

Sharmi / Jun 24th 2024, 11:42 am
image

2024 ஆம் ஆண்டில் இதுவரை 966,604 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. 

SLTDA தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், ஜனவரியில் 208,253 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரியில் 218,350 பேரும், மார்ச் மாதத்தில் 209,181 பேரும், ஏப்ரலில் 148,867 பேரும், மே மாதத்தில் 112,128 பேரும், ஜூன் 01-19 வரை 69,825 பேரும் வருகை தந்துள்ளனர். 

ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்தியாவில் இருந்து பதிவாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து இங்கிலாந்து, சீனா, மாலைதீவு , ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜெர்மனி, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.

அந்தவகையில், ஜனவரி முதல் ஜூன் 2024 வரை, இந்தியா, ரஷ்யா, யுனைடெட் கிங்டம், ஜெர்மனி, சீனா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, போலந்து மற்றும் மாலத்தீவுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள். 2024 ஆம் ஆண்டில் இதுவரை 966,604 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. SLTDA தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், ஜனவரியில் 208,253 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரியில் 218,350 பேரும், மார்ச் மாதத்தில் 209,181 பேரும், ஏப்ரலில் 148,867 பேரும், மே மாதத்தில் 112,128 பேரும், ஜூன் 01-19 வரை 69,825 பேரும் வருகை தந்துள்ளனர். ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்தியாவில் இருந்து பதிவாகியுள்ளது.அதைத் தொடர்ந்து இங்கிலாந்து, சீனா, மாலைதீவு , ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜெர்மனி, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.அந்தவகையில், ஜனவரி முதல் ஜூன் 2024 வரை, இந்தியா, ரஷ்யா, யுனைடெட் கிங்டம், ஜெர்மனி, சீனா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, போலந்து மற்றும் மாலத்தீவுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement