மாத்தறை - வெலிகம, கம்மல்கொட பகுதியில் இருவருக்கு மின்சாரம் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் வெலிகம, கொலேதண்ட பகுதியில் வசிக்கும் 66 வயதுடைய தந்தை உயிரிழந்துள்ளதோடு, 22 வயதுடைய மகனே காயமடைந்துள்ளார்.
உயிரிழந்தவர் தனது மகனுடன் நேற்று (14) இரவு மாடுகளைக் கட்டுவதற்காகச் சென்றிருந்த போது, அருகிலுள்ள காணியொன்றில் சட்டவிரோதமாக இழுக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மின்சாரக் கம்பியை அமைத்த சந்தேக நபரைக் கைது செய்வதற்காக வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மாடு கட்டச் சென்றபோது விபரீதம்; தந்தை பலி மகன் காயம் மாத்தறை - வெலிகம, கம்மல்கொட பகுதியில் இருவருக்கு மின்சாரம் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளார். சம்பவத்தில் வெலிகம, கொலேதண்ட பகுதியில் வசிக்கும் 66 வயதுடைய தந்தை உயிரிழந்துள்ளதோடு, 22 வயதுடைய மகனே காயமடைந்துள்ளார். உயிரிழந்தவர் தனது மகனுடன் நேற்று (14) இரவு மாடுகளைக் கட்டுவதற்காகச் சென்றிருந்த போது, அருகிலுள்ள காணியொன்றில் சட்டவிரோதமாக இழுக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மின்சாரக் கம்பியை அமைத்த சந்தேக நபரைக் கைது செய்வதற்காக வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்