தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாடு முழுவதுமுள்ள தமிழர் வீடுகளில் இன்று வியாழக்கிழமை (15) மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மூதூர்
மூதூர் பிரதேசத்தில் உள்ள தமிழர் வீடுகளில் இன்று தைப்பொங்கல் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோலங்கள் இட்டு புதுப் பானைகளில் பொங்கல் வைத்து, பூஜைகள் செய்து குடும்பங்களோடு மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாடினர்.
உடப்பு
இந்து மக்களின் முக்கிய பண்டிகையான தைத்திருநாள் இன்று உடப்பு தமிழ்க் கிராமத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமாசமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலயத்தில் விஷேட அபிஷேகம், பூஜைகள் காலையில் இடம்பெற்றது.
கதிரவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக ஆலய முன்றலில் பொங்கலிட்டு, தூப தீபம் காட்டப்பட்டது.
அத்துடன் வீடுகளிலும், வியாபார நிலையங்களிலும் தைப்பொங்கல் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மன்னார்
இதேபோன்று மன்னாரில் பொங்கல் நிகழ்வுகள் அமைதியான முறையில் இடம்பெற்றன.
மக்கள் வீடுகளிலும் வர்த்தக நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இன்று காலை பொங்கல் பொங்கி சூரியனுக்கு நன்றி செலுத்தியுள்ளனர்.
மேலும் இந்து மற்றும் கத்தோலிக்க ஆலயங்களில் பொங்கல் நிகழ்வுகள் இடம் பெற்றது.
மட்டக்களப்பு
இன்று (15) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.
காலை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆலய முன்றிலில் பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
பேரிடர்களிலிந்து மக்களை பாதுகாக்கவும் நாட்டு மக்களுக்கு நல்லாசி வேண்டியும் விவசாயிகள் சிறந்த விளைச்சலைபெற வேண்டியும் மாமாங்கேஸ்வரருக்கு பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன.
இன்றைய தைத்திருநாள் விசேட பொங்கல் பூஜையில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் பொங்கல் வாழ்த்துகளையும் தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டனர்.
இதேபோன்று இன்று அதிகாலை முதல் வீடுகளிலும் பொங்கல் படைக்கப்பட்டு சூரியனுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் உழவர் திருநாளாம் தை திருநாள் பொங்கல் சிறப்பு பூசைகள் ஆலய பிரதம குரு கணபதீஸ்வர குருக்கள் தலமையில் இடம்பெற்றது.
காலை 5:00 மணிக்கு ஆரம்பமாகி வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று வல்லிபுர ஆழ்வார் உள் வீதி உலா வந்து பொங்கல் மற்றும் விசேட பூசைக்கள் இடம்பெற்றன.
நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் திருநாள் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாடு முழுவதுமுள்ள தமிழர் வீடுகளில் இன்று வியாழக்கிழமை (15) மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.மூதூர்மூதூர் பிரதேசத்தில் உள்ள தமிழர் வீடுகளில் இன்று தைப்பொங்கல் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.கோலங்கள் இட்டு புதுப் பானைகளில் பொங்கல் வைத்து, பூஜைகள் செய்து குடும்பங்களோடு மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாடினர்.உடப்புஇந்து மக்களின் முக்கிய பண்டிகையான தைத்திருநாள் இன்று உடப்பு தமிழ்க் கிராமத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமாசமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலயத்தில் விஷேட அபிஷேகம், பூஜைகள் காலையில் இடம்பெற்றது.கதிரவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக ஆலய முன்றலில் பொங்கலிட்டு, தூப தீபம் காட்டப்பட்டது. அத்துடன் வீடுகளிலும், வியாபார நிலையங்களிலும் தைப்பொங்கல் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.மன்னார்இதேபோன்று மன்னாரில் பொங்கல் நிகழ்வுகள் அமைதியான முறையில் இடம்பெற்றன.மக்கள் வீடுகளிலும் வர்த்தக நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இன்று காலை பொங்கல் பொங்கி சூரியனுக்கு நன்றி செலுத்தியுள்ளனர்.மேலும் இந்து மற்றும் கத்தோலிக்க ஆலயங்களில் பொங்கல் நிகழ்வுகள் இடம் பெற்றது. மட்டக்களப்புஇன்று (15) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.காலை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆலய முன்றிலில் பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.பேரிடர்களிலிந்து மக்களை பாதுகாக்கவும் நாட்டு மக்களுக்கு நல்லாசி வேண்டியும் விவசாயிகள் சிறந்த விளைச்சலைபெற வேண்டியும் மாமாங்கேஸ்வரருக்கு பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன.இன்றைய தைத்திருநாள் விசேட பொங்கல் பூஜையில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் பொங்கல் வாழ்த்துகளையும் தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டனர்.இதேபோன்று இன்று அதிகாலை முதல் வீடுகளிலும் பொங்கல் படைக்கப்பட்டு சூரியனுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.யாழ்ப்பாணம்யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் உழவர் திருநாளாம் தை திருநாள் பொங்கல் சிறப்பு பூசைகள் ஆலய பிரதம குரு கணபதீஸ்வர குருக்கள் தலமையில் இடம்பெற்றது. காலை 5:00 மணிக்கு ஆரம்பமாகி வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று வல்லிபுர ஆழ்வார் உள் வீதி உலா வந்து பொங்கல் மற்றும் விசேட பூசைக்கள் இடம்பெற்றன.