கிளிநொச்சி பகுதியிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் வாகனம் நாவற்குழி பகுதியில் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக டிப்பர் வாகனம் மின்கம்பம் மற்றும் தொலைத்தொடர்பு கம்பம், சுவர் ஆகியவற்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
குறித்த விபத்தில் வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ராஜீவன் விதுசன் மற்றும் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நாகராஜா ஜீவராஜ் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இரு இளைஞர்களின் சடலங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாவற்குழியில் மின்கம்பத்தை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் பாய்ந்த டிப்பர்; இரு இளைஞர்கள் பலி கிளிநொச்சி பகுதியிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் வாகனம் நாவற்குழி பகுதியில் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக டிப்பர் வாகனம் மின்கம்பம் மற்றும் தொலைத்தொடர்பு கம்பம், சுவர் ஆகியவற்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக தெரியவருகின்றது. குறித்த விபத்தில் வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ராஜீவன் விதுசன் மற்றும் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நாகராஜா ஜீவராஜ் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். இரு இளைஞர்களின் சடலங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.