புத்தளம் - பாலாவி பகுதியில் இருந்து அருவக்காலு பகுதிக்கு சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் புத்தளம் நகருக்கு அருகில் ரயில் பாதையில் இருந்து நேற்று (26) தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளம் - பாலாவியில் சீமெந்து தொழிற்சாலையில் சீமெந்து உற்பத்திக்காக சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் செல்வதற்காக அருவக்காலு பகுதிக்கு சென்று கொண்டிருந்த புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
குறித்த ரயில் பாதையை விட்டு தடம் புரண்டதால், புத்தளம் - குருநாகல் வீதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து, பிரதான வீதியை மறைத்து போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட ரயில் பெட்டிகளை புகையிரத பராமரிப்பு ஊழியர்கள் அகற்றி வாகன போக்குவரத்துக்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
மேலும், பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ரயில்வே பராமரிப்பு பணியாளர்கள் ரயில் தண்டவாளத்தை தயார் செய்து, வீதியை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.
புத்தளத்தில் ரயில் தடம்புரண்டது புத்தளம் - பாலாவி பகுதியில் இருந்து அருவக்காலு பகுதிக்கு சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் புத்தளம் நகருக்கு அருகில் ரயில் பாதையில் இருந்து நேற்று (26) தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புத்தளம் - பாலாவியில் சீமெந்து தொழிற்சாலையில் சீமெந்து உற்பத்திக்காக சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் செல்வதற்காக அருவக்காலு பகுதிக்கு சென்று கொண்டிருந்த புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.குறித்த ரயில் பாதையை விட்டு தடம் புரண்டதால், புத்தளம் - குருநாகல் வீதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் நிறுத்தப்பட்டது.இதனையடுத்து, பிரதான வீதியை மறைத்து போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட ரயில் பெட்டிகளை புகையிரத பராமரிப்பு ஊழியர்கள் அகற்றி வாகன போக்குவரத்துக்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர்.மேலும், பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ரயில்வே பராமரிப்பு பணியாளர்கள் ரயில் தண்டவாளத்தை தயார் செய்து, வீதியை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.