• Sep 20 2024

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் கைதுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடும் கண்டனம்!samugammedia

Tamil nila / Nov 6th 2023, 11:08 am
image

Advertisement

தமிழர் தாயகம் மட்டக்களப்பில் வடக்கு  கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள மயிலத்தமடு, மாதவணை நிலஅபகரிப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு திரும்பும் வழியில் 6 மாணவர்கள் சிங்களக் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாக கண்டிக்கிறது..

தென்தமிழீழத்தின்  திருகோணமலை,அம்பாறை மாவட்டங்களின் பெரும்பகுதி தமிழர் நிலத்தை ஆக்கிரமித்தது போன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் தொடரும் நில ஆக்கிரமிப்பின் ஒரு பதியாக மயிலத்தமடு, மாதவணை நிலங்களை சிங்கள மயமாக்கும்நோக்குடன் அங்கு இருக்கும் பண்னையாளர்களை துன்புறுத்துதல் , கால் நடைகளை கொல்லுதல், சிங்களவர்களை குடியேற்றல்,பொளத்த மயமாக்க பொளத்த விகாரைகள நிறுவுதல் என்பன தொடர் முயற்சியாகநடைபெற்று வருவதை எதிர்த்து பண்ணையார்களுடன்  இணைந்து தமிழ்மக்கள் தொடந்து போராடி வருகின்றனர். 

இத் தொடர் போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து யாழ பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் பங்கு பற்றி திரும்பும் வழியில் பொலீசாரால் வழிமறித்து கைது செய்ததை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாக கண்டிக்கிறது. 

ஐனநாயகரீதியில் எந்த வன்முறையும் இன்றி போராடிய மாணவர்களை உடனடியாக  விடுதலை செய்ய வேண்டும். என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோருகின்றது.

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் கைதுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடும் கண்டனம்samugammedia தமிழர் தாயகம் மட்டக்களப்பில் வடக்கு  கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள மயிலத்தமடு, மாதவணை நிலஅபகரிப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு திரும்பும் வழியில் 6 மாணவர்கள் சிங்களக் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாக கண்டிக்கிறது.தென்தமிழீழத்தின்  திருகோணமலை,அம்பாறை மாவட்டங்களின் பெரும்பகுதி தமிழர் நிலத்தை ஆக்கிரமித்தது போன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் தொடரும் நில ஆக்கிரமிப்பின் ஒரு பதியாக மயிலத்தமடு, மாதவணை நிலங்களை சிங்கள மயமாக்கும்நோக்குடன் அங்கு இருக்கும் பண்னையாளர்களை துன்புறுத்துதல் , கால் நடைகளை கொல்லுதல், சிங்களவர்களை குடியேற்றல்,பொளத்த மயமாக்க பொளத்த விகாரைகள நிறுவுதல் என்பன தொடர் முயற்சியாகநடைபெற்று வருவதை எதிர்த்து பண்ணையார்களுடன்  இணைந்து தமிழ்மக்கள் தொடந்து போராடி வருகின்றனர். இத் தொடர் போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து யாழ பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் பங்கு பற்றி திரும்பும் வழியில் பொலீசாரால் வழிமறித்து கைது செய்ததை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஐனநாயகரீதியில் எந்த வன்முறையும் இன்றி போராடிய மாணவர்களை உடனடியாக  விடுதலை செய்ய வேண்டும். என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement