• Jan 26 2025

4 கிலோ மீற்றர் பயணித்து அதிரடி காட்டிய நாய் மாட்டிய திருடன்

Thansita / Jan 9th 2025, 9:04 pm
image

வாரியப்பொல பகுதியில் மின்கலத் திருடனை ஜோனி என்ற மோப்ப நாய் 4 கிலோ மீற்றர் பயணித்து தேடிப்பிடித்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது 

வாரியப்பொல மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குச் சான்றுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மின்கலங்கள் திருடப்பட்டுள்ளது. 

இத் திருட்டு இடம்பெற்ற  இடத்தில் சொகுசு பஸ் உட்பட பல வாகனங்கள் வாரியபொல நீதவான் நீதிமன்றினால் நிறுத்தப்பட்டிருந்துள்ளது.இந்நிலையில் 

திருட்டு சம்பவம் தொடர்பில் எதுவித தடயங்களும்  கிடைக்காததால்  குருணாகல் பொலிஸ் கெனல் பிரிவிலுள்ள பயிற்சி பெற்ற மோப்ப நாயான ஜோனியை பொலிஸார் வரவழைத்துள்ளனர். 

 ஜோனிக்கு தேடுதல் நடவடிக்கைகாக மின்கலத்துடன் பொருத்தப்பட்டிருந்த முனையத்தை பொலிஸார் வழங்கினர்.

அதனை  மோப்பம் பிடித்த ஜோனி  வாரியபொல ஊடாக கிட்டத்தட்ட நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த  விளக்கடுபொத்த பகுதியில் வீடொன்றறிற்குள்  சென்றது. அங்கு சந்தேக நபர் ஜந்து மின்கலங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 கிலோ மீற்றர் பயணித்து அதிரடி காட்டிய நாய் மாட்டிய திருடன் வாரியப்பொல பகுதியில் மின்கலத் திருடனை ஜோனி என்ற மோப்ப நாய் 4 கிலோ மீற்றர் பயணித்து தேடிப்பிடித்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது வாரியப்பொல மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குச் சான்றுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மின்கலங்கள் திருடப்பட்டுள்ளது. இத் திருட்டு இடம்பெற்ற  இடத்தில் சொகுசு பஸ் உட்பட பல வாகனங்கள் வாரியபொல நீதவான் நீதிமன்றினால் நிறுத்தப்பட்டிருந்துள்ளது.இந்நிலையில் திருட்டு சம்பவம் தொடர்பில் எதுவித தடயங்களும்  கிடைக்காததால்  குருணாகல் பொலிஸ் கெனல் பிரிவிலுள்ள பயிற்சி பெற்ற மோப்ப நாயான ஜோனியை பொலிஸார் வரவழைத்துள்ளனர்.  ஜோனிக்கு தேடுதல் நடவடிக்கைகாக மின்கலத்துடன் பொருத்தப்பட்டிருந்த முனையத்தை பொலிஸார் வழங்கினர்.அதனை  மோப்பம் பிடித்த ஜோனி  வாரியபொல ஊடாக கிட்டத்தட்ட நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த  விளக்கடுபொத்த பகுதியில் வீடொன்றறிற்குள்  சென்றது. அங்கு சந்தேக நபர் ஜந்து மின்கலங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement