• May 19 2024

வயலில் கிடைத்த பொக்கிஷம் : விரையும் மக்கள்! samugammedia

Tamil nila / Jun 6th 2023, 8:40 pm
image

Advertisement

ஆந்திராவில் விவசாயி ஒருவர் தனது விளைநிலத்தில் இருந்து கைப்பற்றிய 30 கேரட் வைரத்தை  2 கோடி ரூபாயிற்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி,  துக்கிலி,  மடிகேரா,  பெகதிராய்,  பேராபலி,  மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயல் வெளிகளில்  மழை பெய்த பின்னர் வைரக்கற்கள் தானாகவே வெளியே வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு  விவசாயி ஒருவர்  60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரத்தை உள்ளூர் வணிகரிடம் நல்ல தொகைக்கு விற்றதாக தகவல் வெளியானது.

அதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கர்னூல் மாவட்ட விவசாயிகள் 2 விலையுயர்ந்த வைரக் கற்களை கண்டுபிடித்து நல்ல தொகைக்கு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்தஇ வைர கற்களை எடுப்பதற்காக  கர்னூல் மாவட்ட விவசாயிகள் அன்றாட வேலைகளை ஒதுக்கி விட்டு  வயல் வெளிகளில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து வைர கற்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில்  விவசாயி ஒருவர் தனது விளைநிலத்தில் 30 கேரட் வைரத்தை கண்டுபிடித்ததாகவும்  அதனை அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வைர வியாபாரியிடம் ரூ.2 கோடிக்கு விற்றுவிட்டதாகவும் அப்பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.

வயலில் கிடைத்த பொக்கிஷம் : விரையும் மக்கள் samugammedia ஆந்திராவில் விவசாயி ஒருவர் தனது விளைநிலத்தில் இருந்து கைப்பற்றிய 30 கேரட் வைரத்தை  2 கோடி ரூபாயிற்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி,  துக்கிலி,  மடிகேரா,  பெகதிராய்,  பேராபலி,  மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயல் வெளிகளில்  மழை பெய்த பின்னர் வைரக்கற்கள் தானாகவே வெளியே வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு  விவசாயி ஒருவர்  60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரத்தை உள்ளூர் வணிகரிடம் நல்ல தொகைக்கு விற்றதாக தகவல் வெளியானது.அதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கர்னூல் மாவட்ட விவசாயிகள் 2 விலையுயர்ந்த வைரக் கற்களை கண்டுபிடித்து நல்ல தொகைக்கு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.இதையடுத்தஇ வைர கற்களை எடுப்பதற்காக  கர்னூல் மாவட்ட விவசாயிகள் அன்றாட வேலைகளை ஒதுக்கி விட்டு  வயல் வெளிகளில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து வைர கற்களை தேடி வருகின்றனர்.இந்நிலையில்  விவசாயி ஒருவர் தனது விளைநிலத்தில் 30 கேரட் வைரத்தை கண்டுபிடித்ததாகவும்  அதனை அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வைர வியாபாரியிடம் ரூ.2 கோடிக்கு விற்றுவிட்டதாகவும் அப்பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement