• Apr 27 2024

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு புளியந்தீவில் மரநடுகை நிகழ்வு..!samugammedia

Sharmi / Jun 8th 2023, 11:43 am
image

Advertisement

உலக சுற்றாடல் தினத்தை சிறப்பிக்கும் முகமாக பல்வேறு செயற்திட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் புளியந்தீவில் ரிதம் சனசமூக நிலையம், ரிதம் இளைஞர் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.

புளியந்தீவு ரிதம் சனசமூக நிலையத்தின் உபதலைவர் பி.திருச்செல்வம் தலைமையில் அமரர் பெரியதம்பிப் புலவர் பூங்காவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் நா.மதிவண்ணன், ரிதம் சனசமூக நிலையத்தின் தலைவரும், கிழக்குப் பல்கலைக்கழகப் பிரதி உபவேந்தருமான வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரம், மாநகரசபை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் டி.டாமராஜ், செரி நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் நிரோசன், ஆனைப்பந்தியான் சமூக நற்பணி மன்றத்தின் தலைவர் மு.துதீஸ்வரன், சனசமூக நிலையத்தின் செயலாளர் மே.துதிகரன், நிருவாக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ரிதம் இளைஞர் கழகம் மற்றும் ரிதம் சனசமூக நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க செரி நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஒரு தொகுதி மரக்கன்றுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிலையில் உலக சுற்றாடல் தினத்தை சிறப்பிக்கும் முகமாக இன்றைய தினம் குறித்த மரநடுகை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதே வேளை குறித்த பெரியதம்பிப் புலவர் பூங்காவினை ரிதம் சனசமூக நிலையத்தினரால் பராபரிப்பு செய்வதற்கான கையளிப்பு செயற்பாடும் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு புளியந்தீவில் மரநடுகை நிகழ்வு.samugammedia உலக சுற்றாடல் தினத்தை சிறப்பிக்கும் முகமாக பல்வேறு செயற்திட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் புளியந்தீவில் ரிதம் சனசமூக நிலையம், ரிதம் இளைஞர் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.புளியந்தீவு ரிதம் சனசமூக நிலையத்தின் உபதலைவர் பி.திருச்செல்வம் தலைமையில் அமரர் பெரியதம்பிப் புலவர் பூங்காவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் நா.மதிவண்ணன், ரிதம் சனசமூக நிலையத்தின் தலைவரும், கிழக்குப் பல்கலைக்கழகப் பிரதி உபவேந்தருமான வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரம், மாநகரசபை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் டி.டாமராஜ், செரி நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் நிரோசன், ஆனைப்பந்தியான் சமூக நற்பணி மன்றத்தின் தலைவர் மு.துதீஸ்வரன், சனசமூக நிலையத்தின் செயலாளர் மே.துதிகரன், நிருவாக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.ரிதம் இளைஞர் கழகம் மற்றும் ரிதம் சனசமூக நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க செரி நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஒரு தொகுதி மரக்கன்றுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிலையில் உலக சுற்றாடல் தினத்தை சிறப்பிக்கும் முகமாக இன்றைய தினம் குறித்த மரநடுகை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது.இதே வேளை குறித்த பெரியதம்பிப் புலவர் பூங்காவினை ரிதம் சனசமூக நிலையத்தினரால் பராபரிப்பு செய்வதற்கான கையளிப்பு செயற்பாடும் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement